குருசேத்திரப் போர்க்களத்தில் படைகளை கவனித்தல்
धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता युयुत्सवः । मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय ।।१।।
பதம்
த்ருதராஷ்ட்ர உவாச
தர்ம-க்ஷேத்ரே குரு-க்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ: மாமகா: பாண்ட வாஷ், சைவ கிம் அகுர்வத ஸஞ்ஜய
க்ருதராஷ்ட்ர உவாச- மாமன்னர் திருதராஷ்டிரர் கூறினார்; தர்ம க்ஷேத்ரே- தர்ம க்ஷேத்திரத்தில்; குரு-கோத்ரே-குருக்ஷேத்திரத்தில்; ஸமவேதா:- ஒன்று கூடிய; யுயுத்ஸவ: போர் புரியும் விருப்பத்துடன்; மாமகா:-என்னுடைய வர்கள் (என் மகன்கள்); பாண்ட வா:-பாண்டுவின் மகன்கள்; ச-மேலும்; ஏவ -நிச்சயமாக; சிம்-என்ன; அருர்வத-செய்தனர்; ஸஞ்ஜய- சஞ்ஜயனே.
திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?
பொருளுரை: பரவலாகப் படிக்கப்படும் மத விஞ்ஞான நூலான பகவத் கீதை, கீதை மஹாத்மியத்தில் (கீதையைப் பற்றிய புகழுரையில்) சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. சுயநோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட விளக்கங் களைத் தவிர்த்து, கிருஷ்ண பக்தரின் உதவியோடு பகவத் கீதையை ஆராய்ந்து படித்து அறிய முயல வேண்டுமென்று அங்கு குறிப்பிடப் பட்டுள்ளது. பகவத் கீதையைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கான உதாரணம் கீதையிலேயே இருக்கின்றது. பகவானிடமிருந்து நேரடியாகக் கேட்டு உபதேசத்தைப் புரிந்து கொண்ட அர்ஜுனனின் வழியை நாம் பின்பற்ற வேண்டும். அந்த சீடப் பரம்பரையின் மூலம் பகவத் கீதையைப் புரிந்துகொள்ள ஒருவனுக்கு பாக்கியம் இருந்தால், அவன் வேத ஞானம் உள்ளிட்ட உலகின் அனைத்து சாஸ்திரக் கல்வியையும் மிஞ்சி விடுகிறான். மற்ற சாஸ்திரங்களில் காணப்படும் எல்லாவற்றையும் கீதையில் காண முடியும். அதுமட்டுமல்ல. வேறெங்கும் காண இயலாத விஷயங்களையும் காணலாம். இதுவே பகவத் கீதையின் சிறப்பு. புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரே நேரடியாக உபதேசித்ததால், இது குறைபாடுகளற்ற ஆன்மீக விஞ்ஞானமாகும்.
மஹாபாரதத்தில், திருதராஷ்டிரருக்கும் சஞ்ஜயனுக்குமிடையே விவாதிக்கப்பட்ட விஷயங்கள், இச்சிறப்பு வாய்ந்த தத்துவத்திற்கு அடிப் படையாக அமைகின்றன. இத்தத்துவம், வேத நாகரிகத்தின் நினைவிற் கெட்டாத காலத்திலிருந்தே புண்ணிய ஸ்தலமாகத் திகழக்கூடிய குருக்ஷேத் திரத்தில் நடைபெற்ற போரின்போது உருவானது. மனித சமுதாயத்தை வழிநடத்த பகவான் இப்பூவுலகில் அவதரித்திருந்தபோது இஃது அவரால் உபதேசிக்கப்பட்டது.
த ர்மக்ஷேத்திர (தர்மச் சடங்குகள் செய்யப்படும் இடம்) எனும் சொல் மிக முக்கியமானது. ஏனெனில், குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் அர்ஜுனனின் தரப்பில் புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் இருந்தார். கௌரவர்களின் தந்தையான திருதராஷ்டிரருக்கு தனது மகன்களின் இறுதி வெற்றி மிகவும் சந்தேகத்திற்குரியதாக இருந்தது. அவரது சந்தேகத்தினாலேயே, "அவர்கள் என்ன செய்தனர்?" என்று தனது காரியதரிசியான சஞ்ஜயனிடம் வினவினார். போரில் ஈடுபடுவதற்கான தீர்மானத்துடன் குருக்ஷேத்திரக் களத்தில் அவரது மகன்களும் அவரது தம்பியான பாண்டுவின் மகன்களும் ஒன்று கூடியிருந்தனர் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும் அவரது கேள்வி முக்கியமானதாகும். இருதரப்புச் சகோதரர்களுக்குமிடையே உடன்பாட்டை அவர் விரும்பவில்லை என்பதோடு, போர்க்களத்தில் தனது மகன்களின் கதி என்னவாகும் என்பதை உறுதியாக அறிய விரும்பினார். ஏனெனில், மேலுலகவாசிகளுக்கும்கூட வந்தனைக்குரிய தலம் என்று வேதங்களில் கூறப்பட்டுள்ள குருக்ஷேத்திரத்தில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததால், போரின் விளைவில் புனிதத் தலத்திற்கு இருக்கக்கூடிய செல்வாக்கைப் பற்றி மிகவும் பயந்தார் திருதராஷ்டிரர். இயற்கையிலேயே நற்குணம் நிரம்பிய அர்ஜுனன் மற்றும் பாண்டுவின் இதர மகன்களுக்கு, இந்த இடம் மிகவும் சாதகமாக அமையும் என்று அவர் நன்றாகவே அறிந்திருந்தார். வியாசரின் சீடனான சஞ்ஜயன், வியாசரது கருணையால், திருதராஷ்டிரரின் அறையில் இருந்தபடியே குருக்ஷேத்திரப் போர்க்களத்தைக் காண முடிந்தது. எனவே, திருதராஷ்டிரர் போர்க்களத்தின் நிலைமையை அவனிடம் கேட்டார்.
பாண்டவர்களும் திருதராஷ்டிரரின் மகன்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆயினும், திருதராஷ்டிரரின் உள்மனம் இங்கு வெளிப் படுத்தப்பட்டுள்ளது. வேண்டுமென்றே அவர் தன்னுடைய மகன்களை மட்டும் குரு வம்சத்தினர் என்று பாராட்டி, பாண்டவர்களை வம்சத்தின் மரபுரிமையிலிருந்து பிரித்துப் பேசுகிறார். இதன் மூலம் திருதராஷ்டிரருக்கு தன் சகோதரனின் மகன்களிடம் உள்ள உறவின் பிரத்தியேக நிலையை ஒருவர் புரிந்துகொள்ளலாம். நெல் வயலில் தேவையற்ற களைகள் பிடுங்கி எறியப்படுவதைப் போல், தர்மத்தின் தந்தையான ஸ்ரீ கிருஷ்ணர் பங்கு கொண்ட குருக்ஷேத்திரம் என்னும் புனிதமான நிலத்தில், தேவையற்ற களைகளான திருதராஷ்டிரர் மகன் துரியோதனனும் பிறரும் ஒழிக்கப்பட்டு, முற்றிலும் தர்மத்திற்கு உட்பட்ட யுதிஷ்டிரரின் தலைமையில் பகவானால் நல்லாட்சி நிலைநாட்டப்படும் என்பது இந்த விஷயத்தின் ஆரம்பத்தி லிருந்தே எதிர்பார்க்கப்படுகிறது. சரித்திர மற்றும் வேத முக்கியத்துவங் களைத் தவிர, இதுவே தர்மக்ஷேத்ரே, குருக்ஷேத்ரே என்ற சொற்களின் கருத்தாகும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
பாவமும் புண்ணியமும்
நன்மையும் தீமையும் செயல்களில் இல்லை செய்யும் செயல் என்னென்ன விளைவுகளை தருமோ அந்த விளைவைக் கொண்டுதான் நன்மையும் தீமையும் ஆக பிரித்துப் பார்க்கிறோம். அது நன்மையான விளைவாக இருந்தால் புண்ணியம் என்றும் தீமையான விளைவாக இருந்தால் பாவம் என்றும் கூறுகின்றோம்.
பசி எடுக்கிறது உணவு சாப்பிட்டு பசியை போக்கிக் கொள்கிறோம், ஆனால் நாவுக்கு சுவையாகவும், நன்றாகவும் இருக்கிறது என்பதற்காக அதிகப்படியாக உண்டால் என்ன நடக்கும், அந்த உண்ட உணவே தீமையை உண்டாக்குகிறது. ஆகவே, செயலில் பாவம் புண்ணியம் இல்லை செயல்களின் விளைவை தான் கவனிக்க வேண்டும். இதற்கு ஒரு சாமியம் (பார்முலா) கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது பாவம் எது? புண்ணியம் எது? என்று சிந்திக்க வேண்டும்.
புண்ணியம் எது;
எண்ணம், சொல், செயல் ஆகிய ஏதோ ஒன்றாளும் தனக்கோ, பிறருக்கோ தற்காலத்திலோ, பிற்காலத்திலோ அறிவுக்கோ, உடலுக்கோ துன்பம் தராது விழிப்போடும். துன்பங்கள் நீங்கும் வகையில் செய்யப்படும் செயல்கள் யாவும் புண்ணியத்தின் பாற்படும்.
பாவம் எது;
ஒருவரது எண்ணம், சொல், செயல் இவைகளினால் எதனாலேனும் தனக்கேனும், பிறருக்கேனும் அன்றைக்கோ, பிற்காலத்திலோ உடலுணர்ச்சிக்கோ, பகுத்தறிவுக்கோ துன்பம் விளைவதாக இருந்தால் அத்தகைய செயல்கள் பாவம் என்பதாகும்.
-அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி
SKYWICH ❤️ பகவத் கீதை, பாவம் புண்ணிய நிர்ணயம், Bhagavad Gita, Bhavam Puniya Nirnhyam @YOGAwithMAHE
0 Comments