Bogar Secret - நாடி சுத்தி தண்டுவட சுத்தி ரகசியம் - Vasiyogam - Yoga with Mahe

வாசியோக இரகசியம் 

நாடிசுத்தி தண்டுவட சுத்தியின் ரகசியம்− Life Tips for Yoga

தியானத்திற்கு முன் செய்ய வேண்டிய
நாடிசுத்தி தண்டுவட சுத்தியின் மகத்துவம் பற்றி போகர் 7000 என்ற நூலில் வாசியோகம் என்ற தலைப்பில் போகர் பெருமான் கூறியிருக்கிறார் இதோ அந்த கவி.

"நாட்டமாய் லகுவாக மூலம்பாரு நலமான வாசிகொண்டு ஊதியூதி,
ஊட்டமாய் சாக்கிரத்தில் நின்றுநின்று உத்தமனே நந்திகண்டால் வாதங்காணும்,
தூட்டமாய் வெறும்பேச்சால் வார்த்தைசொன்னால் சுடுகாட்டுப்பிணமாக சொல்லுக்கொக்கும்,
பூட்டுவாய் மூலத்தின் ஒளிகாண்மட்டும் பொற்கொடிபோல் சுழிமுனையும் திறந்துபோகும்."


பிராணாயாமம் நம்மை தியானநிலைக்கு தகுதியாக்கி முழுமைப்படுத்தும் பயிற்சி முறை அதில் உடலளவில் இருக்கும் கவனம் உள்முகமாக திருப்பம் பெற்று நமக்குள் பயணிக்க வைத்து பல சூட்சம நுட்பங்களை அறிந்துணர்த்தும் அற்புத கலையாகவும் போற்றப்படுகிறது. அதில் அகத்தியரின் தலையாய சீடர் போகர் பெருமான் வாசியோகம் என்ற தலைப்பில் எழுதிய இக்கவியின் விளக்கம் இந்த காணோளியில் பார்த்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.

Post a Comment

0 Comments