வாழ்வின் அர்த்தம்
பரமாத்மாவே ஜீவாத்மா இந்த உண்மையை ஒருவன் உணர்ந்தால் மற்றவர் மீது குரோதத்தை வெளிப்படுத்த இயலாதவன் ஆவான். தர்மத்தின் வழி நடந்து அவன் நியாயத்தை தனதாக்கி வாழ்வான் இதுவே வாழ்வின் அர்த்தம்.
மரணம் என்பது யாது
மனிதன் அன்பு, சுயநலம், குரோதத்தால் இன்னொருவரோடு பின்னிப் பிணைகின்றான். அந்தப் பிணைப்பின் பெயரே மோகம். அந்த மோகத்தால் மனித சரீரம்மே வாழ்வென்று கருதுகிறான். அந்த சரிதத்தின் அழிவு மரணமாக கருதப்படுகிறது.
மரணம் என்று நாம் கூறும் கூற்று மனதில் தோன்றும் நான், நீ அது, இது என்ற இடைவெளி. குரோதம், விரதம் என்ற உணர்ச்சிகளாய் மனம் திகழ்வது. அது அமைதியின் இடத்தில் அழிந்து போகும் ஆக அமைதியற்ற நிலையில் இருக்கும் உடல், மன, உயிர் உணர்ச்சிகள் அழிந்து போகும். ஆத்மா, பரமாத்மா என்ற உண்மை உணர்வில் மரணம் என்னும் பொருள் அர்த்தம் அற்றது. ஆக மரணம் என்பது பிரம்மை அது ஒரு மாயை
0 Comments