கனவில் வாராகி தாயுன் தரிசனம்
கனவில் நான் மிகப்பெரிய தெய்வீக மலையை ஒரு வாராகி வாகனத்தில் சுற்றி வருகிறேன். அப்போது அந்த மலை நடுவே மிகப்பெரிய குவாரி குடையப்பட்டிருந்தது. அதை பார்க்கும்போது என் மனதில் இதையும் மனிதர்கள் விட்டு வைக்காது பணத்திற்காக சூறையாடி உள்ளார்களே என்ற எண்ணத்தோடு அது தடுக்கப்பட்டு இருந்ததையும் கவனித்தேன். அது அப்படியே நீடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு எனது வாராகி வாகனத்தில் மழையை சுற்றி பயணத்தை மேற்கொண்டு இருந்தேன். அப்போது மிகப்பெரிய யானைக் கூட்டம் ஒன்று எனது பயணத்தில் குறுக்கே நின்று கொண்டிருந்ததை நான் கண்டேன் அதை பார்த்து எனது வாராகி பயந்தது அதனால் சிறிது நேரம் ஓய்வெடுத்து அந்த யானை கூட்டம் சென்ற பிறகு நமது பயணத்தை தொடரலாம் என்று ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தோம்.
எங்களை கவனித்த ஒரு யானை எங்களை நோக்கி வேகமாக ஓடி வந்தது. அப்போது வாராகி வாகனத்தின் பயத்தோடு எனது பயமும் கூடிக் கொண்டது வேகமாக பக்கத்தில் வேலி போட்டு இருந்த ஒரு விவசாய இடத்திற்குள் நான் ஏறி குதித்து விட்டேன். வாராகி வாகனம் சிரமப்பட்டு அந்த வேலையை கிழித்துக்கொண்டு அந்த தோப்பிற்குள் வந்தது வந்தவுடன் அதற்கு சாப்பிடக்கூடிய உணவாக அங்கு பயிரிடப்பட்ட ஏதோ ஒன்றை அது வேகமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
அதை கவனித்த அந்த வேலியிட்ட தோட்டத்திற்கு சொந்தக்காரரான ஒரு பெண்மணி எங்களை திட்டிக் கொண்டே வருவது போன்ற ஒரு காட்சி! நான் ஒரே ஒரு காயையோ அல்லது கனியையோ அல்லது கிழங்கையோ சரியாக தெரியவில்லை அதை மட்டும் தான் அது சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. உங்கள் மொத்த பயிரையும் அது சூரயாட வில்லை வாரகியை திட்ட வேண்டாம் இனி அது எதுவும் செய்யாது என்று சமாதானப்படுத்திக் கொண்டிருக்கையில் அந்த யானை மீண்டும் நெருங்கி வந்தது. அதோடு அந்த கனவு என் ஞாபகத்தில் இருந்து மறைந்து விட்டது.
மீண்டும் சிறிது நேரத்தில் இன்னொரு கனவு அங்கு ஒரு அற்புதமான புது வீடு சுத்தி ஒரு தோட்டம் அங்கு மழை அடிவாரத்தில் இருந்து வாராகி ஒன்று வேகமாக ஓடி வருகிறது அதைக் கண்ட அனைவரும் கூச்சலிடுகிறார்கள். அது வந்தால் அனைத்து இடங்களையும் இருக்கும் மனிதர்களையும் சூறையாடி துன்பப்படுத்தும் என்று கூறுவது போல் ஒரு நிலையாக உருவாகிறது. நான் மற்றவர்கள் அனைவரையும் வீட்டிற்குள் சென்று பாதுகாப்பாக இருக்கும் படி கூறிவிட்டு வாராஹி வரும் பாதையை அடைக்கலாம் என்று நினைக்கையில் அது என் நிலத்தை நோக்கிய வேகமாக வந்து கொண்டிருந்தது. என் நிலம் வேலையிட படாத காரணத்தால் அது மிக எளிதாக உள்ளே வந்துவிடும் அதை அடிப்பதற்கு தடி ஒன்றை நாம் வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு தடியை தேடுகிறேன். அதோடு என்னுடைய கனவு நிறைவு பெறுகிறது.
மறுநாள் காலை நான் எழுந்திருக்கும் போது வாராகி தாயை நான் இப்போது சிறிது காலம் வணங்கி வருகிறேன். வாரகியின் அன்பு என்னுள் அதிகமாகிறது ஆக எனது கனவிலும் வாராகி தாய் தரிசனம் தருவதற்காகவே என்னிடம் நெருங்கி வந்திருக்க வேண்டும்.
அதைப் புரிந்து கொள்ளாத இந்த மானுடபுத்தியானது கனவில் வரும் தாயைக் கண்டு விலகி ஓடி இருக்கிறது என்று எண்ணி விம்பிஅழுகிறேன். இனி அந்த பயத்தை விடுத்து அதோடு அன்பு கொண்டு அணைத்துக் கொள்ளும் முயற்சியோடு இருக்க எனது மனதையும் அறிவையும் பலப்படுத்தும் முயற்சியில் இன்னும் பக்தியோடு பயணித்து பண்புடன் வாழ்ந்து வருகிறேன் அறிவின் விழிப்போடு!
வாழ்க வளமுடன் நினைத்த அனைத்தும் நிறைவேறும்! எண்ணிய யாவும் ஈடேறும்! வாராஹி அறிவில் நிறைந்திருக்கிறாள் வளங்கள் வந்து சேரும் சேர்ந்து கொண்டே இருக்கும் மற்றவர்களுக்கும் சேவை செய்து கொண்டே இருப்போம் அன்பும் ஆதரவும் நமது வாழ்வில் இருந்து வையகத்தில் தானப்பிரபாவமாகிறது.

0 Comments