அகத்தியர் வரலாறு நமது வாழ்வியல் சூத்திரமாக என்னுடைய கருத்து அமைந்துள்ளது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விருப்பம் கொண்டு இப்பதிவை நான் வெளியிடுகிறேன்.
அகத்தியம் என்பதற்கான தமிழ் அர்த்தம்
அகம்+தீ+அம் = அகத்தியம் ஆகும்.
அகம் என்பது நமது உள்ளத்தை குறிக்கிறது, தீ என்பது சுடரை குறிக்கிறது, அம் என்பது பிரம்மத்தை குறைக்கிறது. ஆக உள்ளம் சுடர் விடக்கூடிய பிரம்மமாக வெளிப்பட வேண்டும் என்பதற்கான அடிப்படைக் கருத்துக்களை நமது வாழ்வியல் சூத்திரமாக அகத்தியம் என்ற வாழ்க்கை வரலாறு கொடுக்கிறது.
அகத்தியரின் வாழ்க்கை வரலாறு
பூமியில் தாரகாசுரன் என்ற அசுரன் அவன் குழுவோடு பூமியை துன்புறுத்தும் செயலை செய்து வருகிறான். அதை தடுப்பதற்காக இந்திரன், வாயு, அக்னி மூவரும் பூமிக்கு வருகிறார்கள். இவர்களின் வருகையை தெரிந்த தாரகாசுரன் மற்றும் அவனைச் சார்ந்தவர்களும் கடலுக்குள் சென்று ஒழிந்து கொள்கிறார்கள். அவர்களை அழிப்பதற்கு நமக்கு சரியான ஒரு நபர் தேவை என்பதை உணர்ந்த இம்மூவரும் அக்னியையும் வாயுவையும் சேர்த்து அகத்தியன் என்ற புதிய ஒருவனை உருவாக்கி கடல் நீர் அனைத்தையும் குடிக்க சொல்கிறார்கள்.
அகத்தியரும் கடல் நீர் அனைத்தையும் குடித்து தரகாசுரனையும் அவனைச் சார்ந்தவர்களையும் வதம் செய்கிறார். அதன் பிறகு குடித்த கடல் நீரை உமிழ்ந்து மீண்டும் கடலை உருவாக்கி அதன் மேற்பகுதியில் 12 ஆண்டுகள் மிதந்த வண்ணம் தவம் செய்து பின்பு தனது சேவையை இப்பூ உலகிற்கு தருவதாக அவருடைய வாழ்க்கை வரலாறு தொடர்ந்து செல்கிறது. இது அனைத்தும் நமது உடலுக்குள் நடக்கும் செயல்களை கர்ம வினையின் வசம் இருந்து திருப்பி உன்னதமான நிலைக்குத் நற்ச் சூழல்களாக மற்றும் சூத்திரமாக அடியேனின் கருத்துக்கள் அமைந்துள்ளது. அதை இப்பதிவில் நான் தெளிவுற வெளிப்படுத்தி இருக்கிறேன் அதை பார்த்து பகிர்ந்து பயன்னடைவீர்களாக! வாழ்க வளமுடன்
https://m.youtube.com/c/YOGAwithMAHE
0 Comments