முன்னொரு காலத்தில் ஒரு தொழிலாளி அன்றாடம் வேலை பார்த்தால் மட்டுமே அவனுடைய பிழைப்பு நகரும். அவனுடைய போராத காலமுமோ, என்னவோ? கடைசி மூன்று, நான்கு நாட்களாக எந்த வேலையும் இல்லாது போனதால் இதுவரை சேமித்த கையிருப்பு காசு தனக்கும் தன்னுடைய குடும்பத்தின் உணவுச் செலவிற்கு சரியாக போய்விட்டது, இனி அடுத்த வேலை உணவு உண்ண வேண்டுமென்றால் கூட ஏதாவது வேலை பார்த்து பணம் சம்பாதித்தால் மட்டுமே முடியும் என்ற சூழலில் இருக்கிறான். ஆக ஏதாவது வேலை கிடைக்குமா? என்ற சிந்தனையோடு சாலையில் நடந்து கொண்டிருக்கிறான். அப்போது ஒரு ஏரி கரையை கடக்க நேரிட்டது அதை கடந்து இருக்கக்கூடிய ஒரு குளத்தில் தாமரைப் பூக்கள் நிறைய மலர்ந்து இருந்தது. அதில் ஒரு தாமரை மட்டும் பார்ப்பதற்கு மிகவும் அபூர்வமானதாகவும், அழகானதாகவும், சூரிய ஒளியை போல் ஒளி வீசக் கூடியதாகவும் தென்பட்டது.
இதை கவனித்த இந்த தொழிலாளி அந்த தாமரைப் பூவை பறித்து ஏதாவது சந்தையில் விற்றோமானால் நமக்கு இன்றைய பிழைப்பு ஓடும் என்றும் மனதிற்குள் எண்ணி குலத்திற்குள் குதித்தான், அத்தாமரையையும் பறித்தான் அத்தாமரையை கையில் எடுத்துக் கொண்டு முச்சந்தி வீதியில் போய் அதை விற்பனை செய்வதற்காக நின்று கொண்டிருக்கிறான்.
அப்போது ஒரு வியாபாரி அவ்வழியாக வந்து இவன் கையில் இருக்கும் அத்தமரையை பார்த்து அழகாக இருக்கும் இத்தாமரையை நாம் வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ணி, இவனிடம் இத்தாமரை எனக்கு கொடுத்துவிடு நான் உனக்கு 100 ரூபாய் தருகிறேன் என்று கூறுகிறான். ஒரு தாமரைக்கு 100 ரூபாயா என்று ஆச்சரியத்தோடு இவன் மனதிற்குள் எண்ணிக் கொண்டிருக்க, இன்னொருவன் நான் உனக்கு 200 ரூபாய் தருகிறேன் நீ எனக்கு இத்தாமரை கொடுத்துவிடு என்று ஒரு குரல் கொடுக்க இவனுக்கு இன்னும் ஆச்சரியம்! என்னடா இது? நம் கையில் இருப்பது வெறும் பூ தானே சற்று வித்தியாசமாக, அபூர்வமாக இருக்கிறதே தவிர வேறு எதுவும் இதில் விஷேசம் எதுவும் எனக்கு தெரியவில்லையே இதற்கு இவ்வளவு காசு கொடுக்க ஏன் முன் வருகிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அந்நாட்டு அரசன் அவ்வழியாக வந்து அத்தாமரை பூவை பார்த்து இத்தாமரை எனக்கு கொடுத்துவிடு உனக்கு எது வேண்டுமானாலும் தருகிறேன் என்று கூற இதைக்கேட்ட தொழிலாளிக்கு ஆச்சரியத்தோடு ஆச்சரியம் மேலோங்கி விட்டது.
சற்று நிதானத்திற்கு வந்த தொழிலாளி அரசரை பார்த்து தெரியாமல் கேட்கிறேன் அரசே தவறு இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி, இது வெறும் பூ தான் இதற்கு எதற்காக இவ்வளவு மதிப்பு கொடுத்து எது வேண்டுமானாலும் தருகிறேன் என்று கூறுகிறீர்கள். எனக்கு விளக்கம் தர முடியுமா என்று கேட்க அரசர் உடனே அது ஒன்றும் இல்லை ஐயா! இந்த பூ பார்ப்பதற்கு சிறிது வித்தியாசமாக இருக்கிறது, வேறு எங்கும் இதுபோல் ஒரு தாமரை பூவை நான் இதுவரை கண்டதில்லை, அதே சமயம் இந்நாட்டிற்கு புத்தர் பெருமான் வந்திருக்கிறார். அவருக்கு இம்மலரை பரிசாக தரும்போது நம்மளுடைய மதிப்பு உயரும் என்பதற்காக கேட்கிறேன் என்று அரசர் கூற, இதைக் கேட்ட தொழிலாளி புத்தர் எனக்கு மிகவும் பிடித்தமான ஒருவர் நான் தினமும் பூஜிக்க கூடிய மனிதன் என்னை நான் அவருக்காகவே அர்ப்பணம் செய்திருக்கிறேன்.
ஆக இப் பூவை நானே அவரிடம் கொடுத்து விடுகிறேன் என்னை மன்னித்து விடுங்கள் ராஜாவே என்று கூறிக்கொண்டு வேகமாக அப்புவை எடுத்துக்கொண்டு புத்தர் இருக்கும் இடம் நோக்கி நகர தொடங்குகிறார். புத்தரையும் பார்க்கிறார் அவர் முன் மண்டியிட்டு உட்கார்ந்து தன்னை சமர்ப்பணம் செய்கிறாய் கையில் கொண்டு வந்த அப்புவை புத்தர் பெருமானுக்கு படைக்கிறார். புத்தர் வந்தவனையும் அவன் கொடுத்த அப்பூவையும் பார்த்துவிட்டு, இந்த பூ உன் கைக்கு வந்ததிலிருந்து இதுவரை நடந்த அனைத்து விஷயத்தையும் நான் அறிவேன்.
இப்பூவை ராஜாவிடம் நீ கொடுத்திருந்தால் உன் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழும் அளவு வருவாய் தேடி இருக்கலாம் ஏன் அதை செய்து உன் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை என்று கேட்க? அதற்கு அந்த தொழிலாளி நான் இந்த பூவை விற்பனை செய்வதற்காகவே பரித்தேன். ஆனால் நீங்கள் இங்கு வந்திருக்கும் செய்தி அறிந்தவுடன் இப்பூவானது என் இதயத்தின் அன்பாக மாறிவிட்டது. என் இதயத்தின் முழு அன்பை சமர்ப்பணம் செய்யும் ஒரே இடம் தங்களது பாதம் மட்டுமே! ஆக இப் பூவை நான் இங்கு கொண்டு வந்து விட்டேன் ஐயா! ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன் என்று கூற, புத்தர் அவனின் உண்மையான அன்பின் சமர்ப்பணத்தை உணர்ந்து இனி உன் வாழ்வில் வளங்கள் செழிக்கும் என்று ஆசி கூறினார்.
இக்கதை மூலம் நமக்கு கொடுக்கப்படும் விளக்கம் என்ன என்பதை நாம் வீடியோவில் தெரிந்து கொள்ளலாம்.
🙌 வாழ்க வளமுடன் 🙌
0 Comments