நந்தி என்பவர் யார்?
நந்தி தேவர் என்று அவருக்குப் பெயர் வர காரணம் என்ன?
நந்தி என்ற பெயர் சிவத்தைக் குறிக்ககூடியது. அச்சிவத்தை கவனித்துக் கொண்டே இருக்கும் தொழிலை பெரும் தொண்டாக செய்யக்கூடிய சேவகர் சிவத்தை கவனித்துக் கவனித்துக் சிவ தன்மையில் தன்நிலை மறைந்து லயமானதால் சிவமே தன்தன்மை பொருத்திய ஒன்றுக்கு நந்தி தேவர் என்ற பெயரை சூட்டியதாக புராண இதிகாசங்கள் கூறுகிறது. இதில் கூறப்பட்டிருக்கும் உள் கருத்து என்ன என்பதையும் நாம் அவசியம் ஆராய வேண்டும்.
நந்தி தேவர் என்பவரை சிவன் கோவிலில் சிவனை கவனித்தப்படிய இருக்கும் சிலை வடிவில் நாம் கவனிக்கலாம். இறைநிலையை சதா கவனித்தால் இறைநிலை தன்மையின் பேறுபெரும் நிலை வரும் என்பது நிச்சயபடுத்தப்பட்டுள்ளது.
அதோடு நந்தி தேவர் இங்கு எவ்வாறு வர்ணிக்க படுகிறார். பூதகணங்களின் தலைவன், சிவத்தின் வாகனம் மற்றும் கைலாயத்தின் வாயில் காவலன் என்றெல்லாம் கூறப்படுகிறார்.
பூதம் என்பது இங்கு பஞ்சபூதங்களான ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலத்தை குறிக்கும். இவை ஐந்தின் கலவை தான் அனைத்தும். அதில் இதை கையாலும் தன்மை பெற்றது உயிரினங்கள் அவற்றில் ஆளும் நிலையில் இருப்பவன் மனிதன்.
மனிதன் என்பவன் உடலா என்றால் அதுவும் இல்லை என்று தான் கூற வேண்டும். அதாவது உடலுக்குள் இருந்து வெளிப்படும் மனம் நிதான நிலையை இலக்கும் போது உடல் அழிகிறது. ஆக உடல் மற்றும் மனம் மனிதனா என்றால் மனதிற்கு தேவையான எரிபொருள் என்ற உயிர் ஆற்றல் குறைவு மனதையும் உடலையும் தடுமாற செய்கிறது.
ஆக உடலில், உயிரின் இயக்க ஆற்றல் நிறைவு பெற்று இருக்கும் போது மனம் நிதான நிலையை பெரும். உடல், மனம், உயிரின் சீர் இயக்கம் மனிதனின் ஆரோக்கியம் அதுவே அவனின் வாழ்க்கை பயணம். ஆனால் பயணத்தின் நிறைவில் இது மூன்றும் இயக்கமற்று போக காரணம் இயக்கியவன் இவ்விடத்தை விட்டு இன்னொரு இடம் செல்வதால் ஏற்படும் நிலை அது.
இதை இயக்கி இதன் இயக்கத்தில் பஞ்ச பூத பௌதீக தேகத்தை ஆளும் தலைவன் எவனோ! அவனே நந்தி தேவர் என்ற அமர நிலை பெற்ற ஆன்மா!
ஆன்மா என்பது விழிப்புணர்வை குறிக்கிறது.
#spiritual | ஆன்மாவை உணர்தல்
0 Comments