சிவன் சம்பா பாரம்பரிய அரிசியில் இன்று அன்னதானம்
சிவன் சம்பா அரிசி அரைகிலோ
தேவையான அளவு நல்லெண்ணெய்
சோம்பு கருவேப்பிலை பட்டை கிராம்பு 3 டீஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்
அரை கிலோ அரிசிக்கு 70% காய்கறி நெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும்
கால் கிலோ கத்திரிக்காய், கால் கிலோ கேரட், கால் கிலோ உருளைக்கிழங்கு, கால் கிலோ தக்காளி நறுக்கி எடுத்து கொள்ளுங்கள்.
தேவைக்கு தகுந்த உப்பு, மசாலா குழம்பு தூள் 2 டீஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் 2டீஸ்பூன் தேவையான அளவு
முதலில் எண்ணெயை சட்டியில் ஊற்றி காயவைத்து பிறகு கறிவேப்பிலை, சோம்பு, பட்டை கிராம்பு, போட்டு வதக்கி பிறகு இஞ்சி சேர்த்து வதக்கி 30வினாடி பிறகு வெங்காயத்தை அதில் போட்டு பொன்னிறமாக வதங்கிய பிறகு தக்காளியையும் சேர்த்து அதோடு வதக்கவும்.
தக்காளியை தொக்கு கிண்டி பிறகு நறுக்கி வைத்திருக்கக்கூடிய காய்கறிகளை அதோடு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அடி பிடிக்காமல் ஒரு இரண்டு நிமிடம் காய வைத்து பிறகு
அரை கிலோ சிவன் சம்பா அரிசியை 20 நிமிடங்களுக்கு மேல் ஊற வைத்து இருக்க வேண்டும்.
அதை எடுத்து அதோடு சேர்த்து ஒன்றரை பங்கு தண்ணீர் அரிசிக் அதிகமாக விட்டு நன்றாக கொதிக்க வைத்து தண்ணீர் இஞ்சி அரிசி சாதமாக வெந்தவுடன் 15நிமிடங்கள் தம்கட்டி வைத்திருந்தால் சுவையான காய்கறி சாதம் தயார்.







0 Comments