உடலை எப்பொழுதும் ஆரோக்கியமாக நமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இடைப்பட்ட விரதம் மிகுந்த ஒத்துழைப்பு கொடுக்கும்.
இன்று நவீன உலகில் வாழ்ந்து வரும் பல நபர்களுக்கு இடைப்பட்ட விரதம் (intermittent fasting)என்பது பற்றிய விழிப்புணர்வு மிக குறைவாக இருக்கிறது. ஆக முதலில் இடைப்பட்ட விரதம் என்றால் என்ன? அதை எப்படி கையாலுவது என்பது பற்றிய விழிப்புணர்வை இந்த பதிவின் மூலம் ஏற்படுத்திக் கொள்வோம்.
அதன் பிறகு இதன் சம்பந்தமான வழிமுறைகளையும், உணவு முறைகளையும், பயிற்சி முறைகளையும் அடுத்தடுத்த பதிவுகளில் நாம் தொடர்ச்சியாக பார்த்து அறிந்து கொள்ளலாம்.
இப்போது இடைப்பட்ட விரதம் என்றால் என்ன? இந்த இடைப்பட்ட விரதத்தின் நோக்கம் யாது?
இதற்கான பதில்; நாம் வாழும் இந்த காலத்தில் பிறப்பு மற்றும் இறப்பு இதற்கு இடையில் இருக்கும் காலமே ஒரு மனிதனின் வாழ்நாள். இதில் ஆரோக்கியமாக இருக்கும் நாட்கள்தான் முழுமையான, அற்புதமான, ஆனந்தமான நாட்களாக இருக்க முடியும். அப்படி ஆரோக்கியத்தை வைத்துக்கொள்ள நாம் சில விதிமுறைகளை அன்றாடம் செய்து வந்தோமேயானால் நம் உடல் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது சித்தர்கள், மகான்கள், பெரியவர்களின் கருத்து அவர்கள் கொடுத்துச் சென்ற அற்புதமான ஒரு வாழ்க்கை முறைதான் இந்த இடைப்பட்ட விரதம்.
இடைப்பட்ட விரதம் என்பது நாளொன்றுக்கு 16 மணி நேரம் வயிற்றை பட்டினியாக வைத்திருப்பது. அப்படி பட்டினியாக இருப்பதால் நம் உடலில் இருக்கும் நோய்கள் 70 சதவீதத்தில் இருந்து 90 சதவீதம் வரை முற்றிலுமாக குணப்படுத்த படுகிறது என்று சித்தர்கள் கண்டறிந்தார்கள். நாளொன்றுக்கு நமக்கு 24 மணி நேரம் இருக்கிறது. அதில் 16 மணிநேரம் இந்த உடலில் இருக்கும் ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு அளிக்க வேண்டும். அதாவது உணவு உண்ணாமல் இருக்க வேண்டும். மீதம் இருக்கும் எட்டு மணி நேரத்தில் இருவேளை உணவை நாம் எடுத்துக் கொள்ளலாம்.
உதாரணமாக நம் முன்னோர்கள் அதிகாலை நான்கு அல்லது ஐந்து மணிக்கு துயில் கலைத்து, நீராகாரம் அருந்திவிட்டு வயல்வெளிக்கு வேலைக்கு சென்று விடுவார்கள். பிறகு உச்சிவெயில் வரும்போது அதாவது பகல் 12 மணிக்கு உணவு எடுத்துக் கொள்வார்கள். பிறகு வேலையை முடித்து வீடு திரும்பி கை கால்களை அலம்பி உடலை தூய்மை செய்துவிட்டு மாலை 5 மணிக்குள் மாலை அல்லது இரவு உணவை நிறைவு செய்வார்கள். அதன்பிறகு அவர்கள் உணவு என்பதை உடலுக்கு கொடுக்க மாட்டார்கள்.
இருள் சூழ்ந்து விட்டால் உணவு எடுக்கக்கூடாது என்பது நம் தமிழர்களின் பாரம்பரியம். விளக்கு வைத்தால் உணவு உணவு உண்ண கூடாது என்பது பழமொழி இருட்டி விட்டால் ஏதாவது சுக்கு காபியோ, கடுக்காய் கஷாயமோ அருந்திவிட்டு தூங்க சென்று விடுவார்கள்.
இது தான் நமது உணவு பழக்க முறை ஒரு நாளைக்கு இரு முறை உணவு மட்டுமே எடுத்துக் கொள்வார்கள். அப்படி எடுத்துக் கொள்ளும் உணவும் காலை 11 மணியிலிருந்து 7 மணிக்குள் முடிந்துவிடும். ஆக இரவு 7 மணிக்கு உணவு நிறைவு செய்து இருந்தாலும் மீண்டும் மறுநாள் காலை 12 மணிக்கு உச்சிப் பொழுதில் தான் உணவு எடுப்பார்கள். இடையில் அதிகாலையில் வெறும் வயிற்றில் நீர் ஆகாரம் அதாவது நீர் மட்டுமே அருந்துவார்கள். கம்பங் கூழ் அல்லது கேப்பை களியில் ஊற்றி வைத்த நீரை குடித்துவிட்டு வேலைக்கு சென்று விடுவார்கள்.
ஆக முதல் நாள் 7 மணியிலிருந்து மறுநாள் மதியம் 12 மணி வரை வயிற்றை பட்டினியாகவே வைத்திருப்பார்கள் கிட்டத்தட்ட 16 மணி நேர இடைவெளி வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து, உடலை போதுமான உழைப்பில் செலுத்தியுள்ளார்கள். இந்த இரு வேளை உணவு பழக்கம் தான் அன்று இருந்த நமது தாத்தா, பாட்டிக்கு 100 வயதிலும் நடமாடும் அளவு உடலுக்கு ஆற்றலைக் கொடுத்தது. அதோடு எந்த ஒரு நோய் பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.
ஆனால் இன்றோ மூன்று நேர உணவு உண்கிறோம். ஆனால் நோய் கணக்கில்லாமல் உருவாகிக்கொண்டே இருக்கிறது. அதேசமயம் ஆரோக்கிய கேடு என்பது 30, 35 வயதிலேயே பெருபாலான மனிதர்களை தோற்றுவிடுகிறது. மூன்று நேர உணவு உண்பவனை ரோகி என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். அதாவது நோய்வாய்ப்பட்டு மரணத்தை தேடி செல்லும் மனிதர்கள் என்பது அதன் பொருள். அதுவே இரு வேளை உணவு எடுத்துக்கொள்பவர்களை போகி என்று சொல்வார்கள். அதாவது ஆனந்தமயமான வாழ்க்கையை வாழும் மனிதர்கள் என்று பொருள்.
நாம் இப்போது இந்த நவீன உலகத்தில் அதே உணவு பழக்கவழக்கத்தை, அதாவது காலை உணவை ஒரு எட்டு மணிக்கு எடுத்துக் கொள்ளலாம். பிறகு மதிய உணவை மூன்று மணிக்குள் நிறைவு செய்துவிட்டு அதன் பிறகு உணவு என்பது உடலுக்கு கொடுக்காமல் வயிறை பட்டினியாக கிடப்பில் போட்டு விடவேண்டும். கிட்டத்தட்ட மூன்று மணியிலிருந்து காலை 8 மணி வரை 16 மணி நேர இடைவேளை இந்த உடலுக்கு கொடுக்கும் காரணத்தால் நம் உடல் எப்பொழுதும் ஆரோக்கியமாக, ஆற்றல் மிக்கதாக இருக்க அதிக வாய்ப்பை நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம். இதற்கிடையில் அதிக பசி எடுத்தால் நாம் சுக்கு காபி அல்லது கடுக்காய் கஷாயம் போன்ற நீர்ம தன்மை அதிகமுள்ள பானங்களை எடுத்துக் கொள்வது சிறப்பானதாக இருக்கும். கடினமான உணவுப் பொருட்களை உடலுக்கு கொடுக்க கூடாது என்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும். இதையே இடைப்பட்ட விரதமுறை என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள் இது பற்றிய மேலும் தகவல்களை அடுத்த பதிவில் நாம் தெரிந்துகொள்ளலாம்.
வாழ்க வளமுடன்

0 Comments