How can I get a yoga instructor in Calcutta for regular practice?

யோகா நமது வாழ்வில் முக்கிய அங்கம் வகிக்க வேண்டிய அற்புதமான ஒன்று. யோகா என்பதற்கான அர்த்தம் இணைத்தல் என்பதால் ஆகும். 


எதை இணைப்பது என்ற கேள்வி உங்கள் உள்ளத்தில் உருவாகி இருக்கும் அதாவது நமது உடலோடு உயிர் இணைந்தே இருக்க வேண்டும். அதற்கு மனம் ஆரோக்கியமான முறையில் இயங்கவேண்டும். ஆக உடல், மனம், உயிர் இதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இதன் இணைப்பை எப்பொழுதும் வலுவாக வைத்திருக்கும் அற்புதமான, அழகான, ஆரோகியத்தை சீரமைக்கும் பணியை செய்யக்கூடியது தான் இந்த யோகம். 

சரி ஆரோக்கியமான வாழ்கைக்கு யோகத்தை வாழ்கையில் இணைத்து கொள்ள விரும்பினால் யோகம் என்பதை நான் எங்கு கற்றுக் கொள்ளலாம். நான் கொல்கத்தாவில் இருக்கும் ஒரு நபர் யோகப்பயிற்சியை கையாள நினைத்தால் சரியான பயிற்சியாளரை அவ்விடத்தில் எப்படி அறிந்து கொள்ள இயலும். அதுபோல் எந்த ஒரு நபரும் தாம் வசிக்கும் இடம் எதுவானாலும் அங்கு முறைப்படி யோகத்தை எப்படி அறிந்து கொள்ள இயலும் என்ற எண்ணம் உங்களுக்குள் உருவானால் அதற்கான பதில் இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் யோகா பயிற்றுவிப்பாளர்கள் அதிகம் உருவாக்கி உள்ளார்கள். அதில் யோகதா சத்சங்கம் என்று கூறும் யோகானந்தரின் self-realization  என்று சொல்லக்கூடிய யோகா பயிற்சி மையம் பல இடங்களில் அமைந்துள்ளது. கொல்கத்தாவிலும் அது நிர்ணயம் செய்யப்பட்டு பல வருடங்களாக சிறப்பான முறையில் இயங்கி வருகிறது. 


அதேபோல் மனவளக்கலை என்று கூறும் உலக சமுதாய சேவா சங்கம் வேதாத்திரி மகரிஷி அவர்களால் நிரூபிக்கப்பட்டு அதுவும் பல மாநிலங்களில் அந்த மாநிலங்களில் இருக்கும் மாவட்டங்களில் சிறப்பாக இயங்கி வருகிறது. ஆக இந்த இரு யோகப் பயிற்சி மையங்கள் அருகில் இருக்கிறதா? என்று ஆராய்ந்து அங்கு சென்று எளிமையான முறையில் அனைவரும் கற்றுக் கொள்ளக் கூடிய வகையில் கற்றுக் கொடுக்கப்படும் பயிற்சிகளை கையாண்டு வாழ்வில் என்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறேன். 

🙌 வாழ்க வளமுடன் 🙌

Post a Comment

0 Comments