Actor Vivek + Rest in Peace 😔 மரணம் மற்றொரு அத்தியாயத்தின் தொடக்கம்

நடிகர் விவேக் ஏப்ரல் 17ம் தேதி 2021 ஆம் ஆண்டு இந்த உலக வாழ்வை நீத்தார். ஏப்ரல் மாதத்தில் எவரும் கொடுக்காத ஏமாற்றத்தை, விவேக் தனது ரசிகர்களுக்கு கொடுத்துச் சென்றுள்ளார். அவரின் ஆன்மா சாந்தி பெற்று நன்நிலை அடைந்து பெரும் பேறுபெற்றதை நினைத்து மனம் மகிழ்ச்சி அடைந்தாளும், இதுவரை பயணித்து வந்த பௌதீக தேகத்தை நீத்ததர்க்கு எனது ஆழ்ந்த இரங்கல்.



சித்தர்கள் மற்றும் ஆன்மீக பார்வையில் மரணம் என்பது தொடக்கம் தான். ஒருவனுக்கு பிறப்பு என்பது உறுதியாகிவிட்டால், இறப்பு என்பது எந்த அளவு உண்மை என்று நம்ப முடிகிறதோ? அதே போல் ஒருவனது மரணம் மற்றொரு பிறப்பிற்கான தொடக்கமாகும். அதற்கு மனிதன் வாழும் இந்த தேகமானது ஒரு வாகனமாக இருந்து வருகிறது. அந்த வாகனத்தின் பயணத்தில் நாம் சேகரித்த புண்ணியங்களை வைத்து மற்றொரு சிறந்த வாகனத்தை பெறுவதுதான், பிறப்பு இறப்பு என்ற ஒரு சக்கரத்தில் சுழன்று கொண்டிருக்கும் கால சக்கரம் என்பதை சித்தர்கள் கூறுகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் விவேக்கின் வாழ்க்கை பயணத்தில் அவர் இந்த உலக உயிர்கள் அனைத்திற்கும் பலவித நன்மைகளை கொடுத்துச் சென்றுள்ளார். பற்பல உயிர்களுக்கு உதவி செய்துள்ளார் என்பது மறுக்கமுடியாத உண்மை ஆகும்.

அதாவது ஓரறிவு தாவர ஒன்றை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். அது தனது வாழ்நாளில் பல உயிர்களுக்கு தங்குமிடமாகவும், வாழ்வதற்கான பிராணவாயுவை இந்த உலகுக்கு கொடுத்தும், பல உயிர்களுக்கு நிழலை கொடுத்தும், மழை பெய்வதற்கு தேவையான மூலக்கூறுகளை கொடுத்தும், நிறைவான, புண்ணிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி பல உயிர்களுக்கு, உதவியாக இருந்துவரும் பல மரங்களை இந்த வையகத்தில் நட்டு பல உயிர்களுக்கு உதவி புரிந்த நடிகர் விவேக் என்ற பெயர் கொண்ட அந்த ஆன்மா இப்போது பயணித்த வாகனத்திலிருந்து(அவரின் தேகம்) விடுபட்டு அதிவேகமாக பிரபஞ்சங்கள் முழுவதும் வியாபித்து சுற்றித்திரியும் சிறந்த வாகனத்தை பெறுவதற்காகவே! இந்த உடல் எனும் பௌதீக தேக வாகனத்தை நிறுத்தி இருக்கிறார் என்பது எனது நம்பிக்கை ஆகும்.



அது பற்றிய முழு தகவல் எனது வீடியோவில் கொடுத்துள்ளேன் அவரின் இழப்பு உங்களுக்கு பெரும் காயத்தை, வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால். எனது இந்த வீடியோவில் கூறப்பட்ட உண்மை வார்த்தைகள் உங்கள் காயங்களுக்கு மருந்தாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. வாழ்க வளமுடன்

Post a Comment

0 Comments