பச்சைப்பயிறு சாதம்
சிலருக்கு தோசை இட்லி போன்ற உணவுகளை விட சாதம் தான் மிகவும் பிடிக்கும் அவர்களைப் போன்றவர்கள் பச்சைப்பயிறு சாதத்தை தயார் செய்து, சுவை மிகுந்த ஆரோக்கியம் நிறைந்த உணவை சாப்பிடலாம்.
பச்சைப்பயிறு சாதத்திற்கு தேவையான பொருள்:
2 பெரிய வெங்காயம்
3 தக்காளி
1 முழு பூண்டு
காரத்திற்கு தகுந்த மிளகுத்தூள்
சிறிது கொத்தமல்லித்தழை, கறுவேப்பிலை
4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
1 டீஸ்பூன் சோம்பு
1 டீஸ்பூன் சீரகம்
1 டம்ளர் புழுங்கலரிசி
1/2 டம்ளர் பச்சைப்பயிறு
1/2 டீஸ்பூன் கடுகு
செய்முறை: முதலில் ஒரு 500 கிராம் புழுங்கல் அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து பிறகு அதில் நீரை ஊற்றி 20 நிமிடம் ஊற விட வேண்டும். பிறகு 250 கிராம் பச்சை பயறை கடாயில் வைத்து இலேசாக நறுமணம் வரும்வரை மிதமாக சூடு ஏற்ற வேண்டும் மிதமான சூட்டிற்கு பிறகு வறுத்தெடுத்த பச்சை பயிரை கழுவி சுத்தம் செய்து ஊற வைத்த அரிசியுடன் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
பிறகு சமைக்கும் பாத்திரத்தில் 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடு ஏறியவுடன் அதில் 1/2 டீஸ்பூன் கடுகு சேர்க்க வேண்டும் அதோடு 1 டீஸ்பூன் சீரகத்தை சேர்த்து லேசாக பொரிந்து வரும் போது அதில் சிறிது, சிறிதாக நறுக்கிய வெங்காயம் மற்றும் முழு பூண்டு பற்கள் தோலுரித்து சேர்த்துக் கொள்ளவும். பிறகு தேவையான காரத்திற்கு மிளகுத் தூள் சேர்த்து அதில் சிறிது கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
.
வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கி அதோடு நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அதில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் சாம்பார் தூள் சேர்த்து வதக்கி எடுக்கவேண்டும். நன்றாக வதங்கிய பிறகு அதோடு ஊற வைத்த அரிசி மற்றும் பச்சை பயிறு இரண்டையும் சேர்த்து கிளறி அதில் மூன்று டம்ளர் நீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விடவேண்டும். குக்கரில் சமைத்தால் மூன்று விசில் வைத்து இறக்கினால் சுவையான பச்சைப்பயிறு சாதம் தயார்.







0 Comments