பச்சைபயிறு தோசை
பச்சைபயிறு தோசை காலை, மாலை வேளைகளில் எளிமையாக தயார் செய்யும் ஆரோக்கியம் நிறைந்த உணவு ஆகும்.
பச்சைபயிறு தோசைக்கு தேவையான பொருள்;
1 கப் பச்சைப் பயறு
1/2 கப் பச்சை அரிசி
3 சிறு வெங்காயம்
1"(இன்ச்) இஞ்சி துண்டு
தேவைக்கு தகுந்த காரத்துக்கு மிளகுத் தூள்
1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
1 டீஸ்பூன் சீரகம்
1/4 டீஸ்பூன் பெருங்காயத் தூள்
மல்லித் தழை சிறிது
தேவையான அளவு உப்பு
செய்முறை; முதலில் ஒரு கப் பச்சைப் பயறையும், பச்சைஅரிசியையும் நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகு பாத்திரத்தில் வைத்து நீர் விட்டு 8 மணி நேரம் நன்றாக ஊற விடவேண்டும். 8 மணி நேரத்திற்குப் பிறகு அதோடு 3 சின்ன வெங்காயம், ஒரு துண்டு இஞ்சி, காரத்திற்கு தகுந்த மிளகு, அரை டீஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள், வாசனைக்கு சிறிது மல்லித்தழை அல்லது புதினா என அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக மை போல அரைக்க வேண்டும்.
8 மணி நேரம் ஊறவைத்து நன்றாக மைபோல அரைத்தால் தான் தோசை மெலிசாக வரும். மைபோல் அரைத்த தோசை மாவில் தேவைக்கு தகுந்த உப்பு சேர்த்து கலக்கி தோசை சுட்டு தொட்டுக்கொள்ள தக்காளி அல்லது தேங்காய்ச் சட்னி செய்து பசிதீர சுவைக்கலாம்.
பச்சை பயிறு புரதம் மற்றும் நார்ச்சத்துக்களை உள்ளடக்கியது. இதனால் சருமம் பளபளப்பாகும், மலச்சிக்கல் நீங்கும், உடல் சூடு தணியும் அதோடு உடலுக்கு தேவையான புரதம் மற்றும் இரும்புச் சத்து இதில் இருப்பதால் நரம்பு கோளாறுகள் குணமாகும், கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகளையும் சரிசெய்யும், அதிகமான உடல் உழைப்பை வெளிப்படுத்துபவர்களுக்கும் அதிக தூரம் பயணம் செய்பவர்களுக்கு சிறந்த முறையில் ஊட்டமளிக்கும் அருமையான உணவு பச்சைபயிறு தோசை.






0 Comments