பச்சை பயறு கஞ்சி - intermittent fasting food

 பச்சைப்பயிறு கஞ்சி 

பச்சைப்பயிறு பயன்படுத்தி தோசை அல்லது சாதம் என்று மசாலா பொருள் சேர்த்து சமைக்கும் உணவுகளை விட மசாலா இல்லாத பச்சை பயிறு கஞ்சி ஒரு சிறந்த உணவாக கருதப்படுகிறது. இட்லி தோசை என்றும் எப்போதும் இருக்கும் உணவு இல்லாமல் இது போன்று கஞ்சி வகைகளை உணவாக எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமான வாழ்வை நிரந்தரமாக்கிக் கொள்ள முடியும். 



பச்சைப்பயிறு கஞ்சிக்கு தேவையான பொருள்: 

500 கிராம் கைகுத்தல் அரிசி 

250 கிராம் பச்சைப் பயிறு 

சீரகம் 1 டீஸ்பூன் 

1/4 மூடி தேங்காய் 

தேவையான அளவு உப்பு 

செய்முறை: அரிசியை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து பிறகு நீர் ஊற்றி ஊற விட வேண்டும். அதேபோல் பச்சைப் பயறையும் சுத்தம் செய்து ஊற வைக்கவேண்டும். இரண்டு அல்லது மூன்று மணி நேரம் நன்றாக ஊறிய பிறகு பச்சை பயிரில் நீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேகவிட வேண்டும் பச்சை பயிறு சாப்பிடக் கூடிய அளவு  வெந்தவுடன் அதோடு ஊற வைத்த அரிசியையும் சேர்த்து, ஒரு டீஸ்பூன் சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, அரிசி சாப்பிட கூடிய அளவு சாதம் ஆகும் வரை வேகவிட வேண்டும். 

நன்றாக வெந்தவுடன் அதில் கால் மூடி தேங்காயைத் துருவி அந்தத் தூளை சாதத்துடன் சேர்த்து இறக்கினால் பச்சைப்பயிறு சாதம் தயார். இதற்குத் தொட்டுக்கொள்ள தேங்காய் துவையல், கொள்ளு துவையல் மற்றும் வெந்தயத் துவையல் செய்து சாப்பிட்டால் அமிர்தத்தின் சுவையை போல் இருக்கும். 

இதுபோன்ற எளிமையான மசாலா அதிகம் சேர்க்காத உணவுகளில் உடலுக்கு முழுமையான ஆற்றலை விரைவில் உடலில் சேர்க்கும் தன்மை அதிகம் உண்டு, காரணம் உடலானது எந்த சிரமமும் இல்லாமல் சாப்பிட்ட உணவை விரைவில் செரிமானம் செய்யும் முறையில் இந்த வகை உணவுகள் சமைக்கப்படுகிறது. 

குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இது போன்ற பயிறு வகை கஞ்சியை செய்து கொடுப்பதால் அவர்களின் உடலுக்கு தேவையான புரதம் மற்றும் உடலுக்கு தேவையான உயிர் சத்துக்கள் முழுமையாக போதுமான அளவு கிடைக்கிறது.

Post a Comment

0 Comments