வெஜிடபிள் பிரியாணி எளிமையாக தயார் செய்யலாம்.


 வெஜ் பிரியாணி 

விசேஷ தினங்கள் மற்றும் விருந்தினர் வருகையின்போது சிறப்பிக்க கூடிய வகையில் தயார் செய்யும் இன்னொரு உணவையும் பார்க்கலாம். காய்கறிகள் நிறைந்த வெஜ் பிரியாணி உடலுக்கு போதுமான சத்துக்களை கொண்ட சுவை மிகுந்த இயற்கை உணவு. 

வெஜிடபிள் பிரியாணி,வெஜிடபுள் பிரியாணி,பிரியாணி,சீரக சம்பா வெஜிடபிள் பிரியாணி,வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி,#வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி,வெஜ் பிரியாணி,வெஜி பிரியாணி,வெஜிடபிள்,தம் பிரியாணி,காய் பிரியாணி,mt பிரியாணி,மட்டன் பிரியாணி,செட்டிநாடு வெஜ் பிரியாணி,சிக்கன் பிரியாணி,வெஜிடபிள் குருமா,எம்டி பிரியாணி,காய்கறி பிரியாணி,ஹோம் மேடு பிரியாணி,பாய் வீட்டு பிரியாணி,குதிரைவாலி பிரியாணி,தலபாக்கட்டு பிரியாணி,#மீல்மேக்கர் பிரியாணி செய்வது எப்படி,பிரியாணி குக்கரில் குழையாமல் செய்வது எப்படி


வெஜிடபிள் பிரியாணிக்கு தேவையான பொருட்கள்: 

  1. பாசுமதி அரிசி 2 கப் 
  2. தேங்காய் எண்ணெய் 1 டீஸ்பூன் 
  3. 1 டீஸ்பூன் நெய்
  4. 1 டீஸ்பூன் சோம்பு 
  5. 1 டீஸ்பூன் சீரகம் 
  6. 4 கிராம்பு 
  7. 1 பிரிஞ்சி இலை 
  8. 1 நட்சத்திர சோம்பு 
  9. 1 பட்டை 
  10. 6 ஏலக்காய் 
  11. 2 பெரிய வெங்காயம் 
  12. 3 பச்சை மிளகாய் 
  13. 1" துண்டு இஞ்சி 
  14. 3 பூண்டு பற்கள் 
  15. 2 தக்காளி 
  16. மிளகு பொடி 
  17. மல்லிப் பொடி 
  18. மஞ்சள் தூள் 
  19. 1 கேரட் 
  20. 1 கப் பீன்ஸ் 
  21. 1 கப் பச்சை பட்டாணி 
  22. 1 உருளைக்கிழங்கு 
  23. 1 கப் தயிர் 
  24. சிறிது புதினா கொத்தமல்லி மற்றும் உப்பு 


குறிப்பு: இதில் கூறியபடி வரிசையாக பின்தொடர்ந்து சமையல் செய்தால் மட்டுமே சுவை நன்றாக இருக்கும் என்பதை கவனத்தில் நிறுத்துங்கள். 

செய்முறை; முதலில் அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து பிறகு 20 நிமிடம் நீரில் ஊற விட வேண்டும். பின் சமைக்கும் பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து சூடேற்றவும். மிதமாக சூடு ஏறியவுடன் அதில் ஒரு டீஸ்பூன் சோம்பு, ஒரு டீஸ்பூன் சீரகம், 4 கிராம்பு, ஒரு பிரிஞ்சி இலை, ஒரு நட்சத்திர சோம்பு, ஒரு சிறிய அளவு பட்டை, 6 ஏலக்காய் என அனைத்தையும் சேர்த்து வாசம் வரும்வரை கிளறி வதக்கவேண்டும். 

நன்றாக வாசம் வந்தவுடன் அதில் இரண்டு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிசாக நறுக்கி சேர்க்கவும் அதோடு 3 பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு கிளறவும். 

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் அதில் இஞ்சி மற்றும் பூண்டு பற்களை மைபோல அரைத்து விழுதாக்கி ஒரு டீஸ்பூன் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கிளறி வதக்கவும். 

பிறகு இரண்டு பழுத்த தக்காளியை நறுக்கி அதில் சேர்த்து தக்காளி நன்றாக மசியும் அளவு வதக்கவேண்டும். தக்காளி கடைசியில் தான் போடவேண்டும் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வதக்கக்கூடாது. ஒவ்வொன்றாக வதங்கிய பின் அடுத்தடுத்த பொருட்களை சேர்க்க வேண்டியது அவசியம். 

பிறகு அதில் ஒரு டீஸ்பூன் மிளகு பொடி, ஒரு டீஸ்பூன் மல்லி பொடி, 1/2 டீஸ்பூன் மஞ்சள்பொடி சேர்த்து மசாலா பொருளின் பச்சை வாசம் போகும் வரை கிளறவேண்டும். பிறகு 1 கப் கேரட்டை பெரிய பெரிய துண்டாக நறுக்கி சேர்க்கவும், அதோடு ஒரு கப் பின்ஸ் காயை சிறிது சிறிதாக நறுக்கி சேர்க்கவும், அதோடு ஒரு கப் பச்சை பட்டாணி, 1 உருளைக்கிழங்கு தோல் சீவி துண்டு துண்டாக நறுக்கி சேர்க்கவும், தேவைக்குத் தகுந்த உப்பு சேர்த்து பிறகு 3 டீஸ்பூன் தயிர் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பின் அதில் 3 கப் அளவு சுடு நீர் ஊற்றவேண்டும் (2 கப் அரிசிக்கு 3 கப் நீர் அளவு) பிறகு அதில் தேவையான அளவு புதினா கொத்தமல்லி இலையை சிறிது சிறிதாக நறுக்கி தூவ வேண்டும். 

இவை அனைத்தும் நல்ல கொதி நிலைக்கு வந்தவுடன் அதில் ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்றாகக் கலக்கி விடவேண்டும். கலக்கும் போது அரிசி உடையாமல் இருக்க கவனம் தேவை, அரிசியை சேர்ந்த பிறகு ஒரு கொதி நிலை வரும் வரை பொறுத்திருந்து பிறகு பாத்திரத்தின் மூடியை மூடவேண்டும். பாத்திரத்தை மூடிய பிறகு அதன் மேலே இன்னொரு பாத்திரத்தில் சுடு நீர் வைத்து 15 நிமிடம் பிரியாணியை வேகவிட்டு பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மேலே மூடி இருக்கும் மூடியை திறக்காமல் அப்படியே ஒரு பத்து நிமிடம் அதே தம்மில் வைக்க வேண்டும். 

10 நிமிடத்திற்கு பிறகு சுவைமிகுந்த தம்தம் வெஜ் பிரியாணி தயார்.


Post a Comment

0 Comments