ஜோதிட பலன்களை பெற வேண்டுமா? Want to get astrological benefits?

அனைருக்கும் வணக்கம் 

சிவ ஜோதிடம் என்ற இந்த யூடியூப் சேனலின் முதல் பதிவில் நாம் ஜோதிடம் என்பது என்ன? ஜோதிடம் எல்லோருக்கும் அவசியம் தானா? ஜோதிடம் எப்படி கணிக்கப்படுகிறது? என்பதை பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் காண இருக்கிறோம். 

 

முதலில் ஜோதிடம் என்பது என்ன என்ற கேள்வியை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அதாவது நமக்குள் ஜோதி இருக்கும் இடத்தை அறிய கிரகப் பலன்களை பார்ப்பது, கிரக பலன்களுக்கு தகுந்தவாறு நமது வாழ்க்கையின் பயணத்தை சரியான முறையில் அமைத்துக் கொள்ளும் நுட்பமே சோதிடம் என்று கருதப்படுகிறது. அடுத்ததாக அனைவருக்கும் இது அவசியம்தானா என்றால் நிச்சயம் அதற்கு இல்லை என்பதே பதில் காரணம் யோகக்கலையில் மேல் நிலையை அடைந்தவர்கள் கிரகங்களோடு நட்புறவு கொண்டு இருப்பதால் அவர்களுக்கு கிரகங்கள் நற்பலன்களையே கொடுக்கும் யோகிகள் கர்ம பலன்களை கரைத்திருப்பார்கள். 

இன்றைய ராசிபலன்,தினசரி ராசிபலன்,ராசிபலன்,மாத ராசிபலன்,வார ராசிபலன்,தினமலர் ராசிபலன்,புரட்டாசி ராசிபலன்,புரட்டாசி மாத ராசிபலன் 2020,அக்டோபர் மாத ராசி பலன்,ஷெல்வீ புரட்டாசி 2020,#astrotvadidhiyan,#monthrasipalankadagam,#octobermonthpalan,#kadagamoctobermonthpalan,#monthrasipalan2020,#monthrasipalan2020intamil,#monthrasipalanintamil,#monthrasipalan,#murugesanjothidar,#jothidarmurugesan,#astro,#google,#அக்டோபர்மாதபலன்கடகம்,#2020பலன்கடகம்,#2020monthpalankadagam


யோகப் பாதையில் பயணம் செய்பவர்களுக்கும் அதை பற்றி அறிந்து கொள்ள எண்ணம் இல்லாதவர்களுக்கு மட்டுமே ஜோதிட கலை உபயோகப்படும் கிரகங்களின் சஞ்சாரங்கள் சாமானியர்களுக்கு நன்மை தீமைகளை விளைவிக்கும்.

அடுத்த கேள்வி ஜோதிடம் எவ்வாறு கணிக்கப்படுகிறது? நாம் பிறக்கும் தருணத்தில் வானிநிலையில் கிரகங்கள் எவ்வாறு அமைந்துள்ளது நட்சத்திர அமைப்புகள் எவ்வாறு நிலைகொண்டுள்ளது என்று கணித்து அதன் மூலம் ஒருவனின் நன்மை, தீமை பற்றிய கணிப்பு ஜோதிடம் என்று கூறப்படுகிறது.

ஆனால் ஒருவன் பிறக்கும் தருணத்தை தீர்மானிப்பது அவனுடைய முன்ஜென்ம கர்ம வினைகள்.  ஆக ஒருவன் கர்மவினைகளை சரி செய்தால் அவனுடைய பாவ தீய செயல்களிலிருந்து விடுபட்டு பேரின்ப நிலையை அடைய முடியும் என்பது சித்தர்களின் கூற்று. அதற்கான பாதையில் பயணம் செய்யும்போது கர்ம வினைகள் நம்மை துன்புறுத்தும். 

அதிலிருந்து நம்மை காத்துக் கொள்ள மந்திரம், யந்திரம், தந்திரம் என்ற ஜோதிட நுட்பங்கள் நாம் பயன்படுத்தி முழுமை நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே ஜோதிட கலை உருவாக்கப்பட்டது. ஜோதிடம் என்பது கடல் போன்றது அதை ஐந்து நிமிடத்தில் புரிந்து கொள்ள நினைப்பது நமது அறியாமையைக் குறிக்கும் ஆக அதன் நுட்பங்கள் அனைத்தையும் அறிந்து முழுமையான நிலையை மக்கள் அனைவரும் அடைய வேண்டும் என்பதற்காகவே இந்த சிவ ஜோதிட யூடியூப் சேனல் உருவாக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments