I am Sorry, i have to say this | Jothi Durga | Tamil | @YogawithMahe

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை குரு வாழ்க 

நாம் இந்த செய்தியில் 13/09/2020 இன்றைக்கு நடத்தப்படும் நீட் தேர்வு சார்ந்த தகவல்களை பற்றிதான் உரையாடல் செய்ய இருக்கிறோம். இதைப்பற்றி அனைவரும் நிச்சயமாக சிந்திக்க வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நீட் தேர்வுக்கு பயந்து நேற்று மதுரையில் 19 வயது நிரம்பிய ஒரு பெண்ணும் அரியலூரில் ஒரு பையனும் தற்கொலை செய்துள்ளார்கள். 

இந்த பதிவில் நீட் தேர்வு என்பது மாணவர்களுக்கு வேண்டுமா? வேண்டாமா? என்றெல்லாம் ஆலோசனை செய்ய போவது கிடையாது. நம்முடைய சூழ்நிலை எப்படி இருக்கிறது, எதை நோக்கி பயணப்படுகிறது, அதற்கு மாறாக எவ்வாறு பயணபட வேண்டும் என்று தான் சிந்திக்க இருகிறோம். முதலில் கல்வி என்பது என்னவென்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது கல்வி என்பதே நம்முடைய வாழ்க்கையை நமக்கு பிடித்தார் போல் மாற்றிக் கொள்வதற்காகவும், வாழக்கூடிய வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்காகவும் நம்முடைய அறிவின் வளர்ச்சியை அதிகப்படுத்திக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்.

ஆனால் இன்று இந்த வாழ்க்கையில் ஏதோ ஒரு சிறு விஷயத்திற்கு பயந்து தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் அளவிற்கு நம்முடைய கல்வி பழுதடைந்து விட்டது. மாணவர்களுக்கு வைராக்கியம் மற்றும் தைரியத்தை வழங்கக்கூடிய கல்வி துறை இன்று திசைமாறி பயணம் செய்கிறது. 

ஆரம்ப காலங்களில் குருவானவர் தன்னுடைய சீடனிடம் எதைப் பற்றிய ஆர்வம் அதிகமாக இருக்கிறது. அவனுடைய சிந்தனை எதில் அதிகமாக ஈடுபடுத்தப்படுகிறது. என்பதை ஆராய்ந்து அதன் வழி அவனுடைய அறிவை வளர்க்க முயற்சி மேற்கொள்ளபடும் அச்செயல்களினால் அவன் விருப்பம் சார்ந்த தொழிலையும், கலைகளையும் அவனிடம் வளர்க்க பயிற்சிகளைக் கொடுத்து அவனையும் அவன் கற்ற கல்வியையும் சேர்த்து வளர்த்து வந்தார்கள். இதனால் கல்வியின் மகிமையும் மேம்படுத்தபட்டது. அதை விரும்பி கற்றுகொண்ட ஒருவனின் வாழ்வும் முன்னேற்றம் அடைந்தது. 

ஆனால் இன்றோ இந்த வாழ்க்கையில் பணம் என்பதை எதில் அதிகமாக ஈட்டலாம் என்பதை சார்ந்தே அவன் படிக்கும் படிப்பும், தொழிலும் தேர்தெடுக்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்கள் தான் இன்றைய சூழல் போன்ற துயரச் சம்பவங்கள் நிகழ்வதற்கு அடித்தளமாக இருந்துவருகிறது. 

முதலில் நாம் துன்பம் தரும் ஒரு விஷயத்தை முளையிலேயே கிள்ள வேண்டும் என்பது போல சிறு சிறு பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும். உதாரணத்திற்கு ஒருவனுக்கு தனது உடலின் தன்மையையும், உண்ணும் உணவின் தன்மைகளையும், உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் மூலிகைகளின் தன்மையையும் அறியும் ஆர்வம் அதிகமாக இருக்குமேயானால் அவன் தனது உடலையும் மனதையும் அதற்கு தகுந்தாற்போல் மாற்றத் தனது அறிவை வளர்க்க முயற்சி மேற்க்கொள்வான். ஆனால் அதோடு அவனுக்கு சேவை செய்யும் மனப்பான்மையும் உடன் இருந்தால் அவன் மருத்துவத்திற்குத் தகுதியானவர் என்பதை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் கல்வி அறிவை போதிப்பார் அன்று இருந்த கல்வி குரு. 

ஆனால் அதுவே ஒருவனுக்கு ஒரு விஷயத்தை அழகாக பார்த்து அதை அதற்கு தகுந்தார்போல் வடிவமைக்கும் மனப்பான்மை இருந்தால் அவனுக்கு சிற்பக்கலை போன்ற கல்வி முறையை போதிப்பார். அதுவே  மற்றொருவனுக்கு தனது உடலை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்துக் கொள்வதில் ஆர்வம் இருக்கும் ஆனால் அதன் மூலம் மற்றவர்களை ஆளும் தன்மை இருந்தால் அவனை ஒரு போர் வீரனாக மாற்றும் முயற்சியை கல்விகுரு மேற்கொள்வார். 

இதுபோல ஒருவனின் ஆர்வமும் மனச் சிந்தனையும் எதில் அதிகமாக இருக்கிறதோ அது சார்ந்த படிப்பு அன்று அவனுக்கு கொடுக்கப்பட்டது அதனால்தான் அன்று நோய்களும் குறைவு, மருத்துவர்களும் குறைவு 

ஆனால் இன்று மாணவர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு தான் அவனுடைய எதிர்காலம் தீர்மானிக்க படுகிறதா? என்றால் நிச்சயம் இல்லை அதற்கு மாறாக எதிர்காலத்தில் வரவிருக்கும் வருமானத்தை மையமாகக் கொண்டு படிக்கும் கல்வி தீர்மானிக்கப்படுகிறது. அதனால் தான் அவன் படிக்கும் போதே நம்முடைய வருமானம் செலவாகிறது. 

இதுபோன்ற ஒரு சில விஷயங்களின் அடித்தளத்தை சரி செய்யாமல் போனதன் காரணமாகத்தான் இன்று இந்த சமுதாயம் ஒருவரின் மன வலிமைக்கு கூட கல்வியை கொடுக்க முடியாத அளவுக்கு பின் தள்ளப் பட்டுள்ளது என்பதை இங்கே ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 

பொதுவாக ஒரு மாணவன் போர் வீரராக ஆக நினைத்தாலும், மருத்துவராக ஆக நினைத்தாலும், கட்டிடகலை நிபுணராக ஆக நினைத்தாலும். முதலில் அவனுடைய உடல், மனம், உயிர் ஒன்றாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அப்போது தான் எந்தத் துறையிலும் அவனால் சிறந்து விளங்க முடியும். ஆகையால் ஒருவனுக்கு சிறுவயது முதல் அவனுக்கு முக்கிய பாடமாக புகட்டப்படுவது ஒருவனுடைய உடலையும், மனதையும், உயிரையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் அளவிற்கு அறிவின் வளர்ச்சியை வளர்ப்பது தான் கல்வி முறையாக கொடுப்பார்கள். 

அதனால்தான் அன்று இருந்தவர்கள் அதிக நாள் தனது வாழ்க்கையை ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும் வாழ்ந்தார்கள். அதே சமயத்தில் எல்லாக் கலைகளிலும், துறைகளிலும் நல்ல முன்னேற்றத்தையும் அடைந்தார்கள். 

அதுபோல் சேவை மனப்பான்மை உடையவர்களுக்கு மற்றும்  பணத்தையும், பொருளையும் பொருட்படுத்தாத நபர்களுக்கு மட்டுமே மருத்துவக்கல்வி அவ்வாறு மருத்துவர் ஆனாலும் அதில் வருமானம் என்பது மிகவும் குறைவு என்ற சூழல் வரும்போது அந்தப் படிப்பில் எவ்வளவு பேர் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது பொறுத்தே ஒரு துறையின் வளர்ச்சி அடங்கியிருக்கிறது. அந்நிலை ஏற்படும் போது இந்த உலகத்தில் நோய்களும் குறைந்து விடும் என்பது என்னுடைய கருத்து. 

இன்று பணத்திற்காக ஒரு துறையும் தொழிலும் தேர்ந்தெடுக்கப்படுவது தான் இன்று இந்த சூழல்நிலைக்கும் துயர சம்பவங்களுக்கும் காரணம். முதலில் கல்வித் துறையின் அடித்தளங்களில் உள்ள குறைகளையும், தவறுகளையும் சரி செய்தாலே போதும் எல்லா துறைகளிலும் பற்றாக்குறை நிச்சயம் ஏற்படும் காரணம் நோய்கள் குறைவதால் நோயாளிகள் இருக்கப்போவது இல்லை அதனால் மருத்துவர்களுக்கு வேலை இல்லாமல் போகும். அதேபோல் தான் மற்ற துறைகளின் நிலையும் ஒருவன் தனது உடலையும், உயிரையும், மனதையும் ஆரோக்கியமாக வைக்கும் கல்வி முறையை கொடுத்தாலே இந்த உலகத்தில் ஏற்படும் எல்லாத் துயரங்களுக்கும் முடிவு என்பது ஆரம்பமாகிவிடும். 

உதாரணமாக தன்னைப் பாதுகாத்து தனது வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என்ற நுட்பம் ஒருவனிடம் துளிர்த்து விட்டால் அவன் எதற்கும் சோர்வடைய மாட்டான். அதே சமயம் அவன் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி என்பது கிடைக்கும். அந்த வெற்றி அவனுக்கு மட்டுமல்ல இந்த உலகத்தில் வாழும் மற்ற உயிர்களுக்கும் நன்மை தரும் என்பதை சொல்லி இந்த தகவலை நான் நிறைவு செய்து கொள்கிறேன். இது பற்றிய தங்களுடைய கருத்துக்களை தயவு செய்து கமெண்டில் பதிவுசெய்யவும். வாழ்க வளமுடன்.

Post a Comment

0 Comments