மன்மதனின் காதல் அம்பு | Life event of Vallalar திருவருட்பா - இரண்டாம் திருமுறை பாடல் | @YogawithMahe

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 

குருவே துணை குரு வாழ்க


இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது வள்ளலாரின் வாழ்க்கை நிகழ்வுகளில் ஒன்று அதாவது அவர் வாழ்ந்த காலத்தில் மக்களின் அறியாமையின் காரணமாக கோவில்களில் #உயிர் பலி இடும் செயல்கள் அவ்வப்போது நடந்து இருந்தது. அவ்வாறு ஒருமுறை ஆட்டுக்குட்டி ஒன்றை பலியிடும் செயல் நடக்க ஆயத்த பணிகள் தயாரானது.


அதை அறிந்து கொண்ட #வள்ளலார் அந்த நிகழ்வை தடுத்து அதற்காக ஒரு பாடலையும் கொடுத்து மக்களின் அறியாமையைப் போக்க முயற்சி செய்தார்

#Thiruvarutpa இரண்டாம் திருமுறை
அவ்வாறு அவர் பாடிய அந்தப் பாடலையும், பாடலின் விளக்கத்தையும், அந்த நிகழ்வினை ஒரு கதையாகவும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இந்த நிகழ்விற்கு மூலகாரணம் மன்மதனின் #காதல் #அம்பு என்பதை சொல்லி நாம் இந்த பதிவுக்குள் போகலாம். முதலில் அந்தக் கதையை தெரிந்து கொள்ளலாம். #வள்ளல் பெருமான் வாழ்ந்த காலத்தில் அவர் வசித்த ஊரில் ஒரு இளம் பெண் அவள் ஒருவன் மீது காதல் கொள்கிறாள். மன்மதனின் காதல் அம்பின் அவஸ்தை அவளை வாட்டி வதைக்கிறது.

மனதில் தனக்கென இருக்கும் இணையுடன் இணையும் நினைப்பில் வாழ்ந்து வருவதால் அவளால் சரியாக உண்ண முடியவில்லை, உறங்க முடியவில்லை, மற்றவர்களுடன் சகஜமாக பேசி பழகி வழக்கமான வாழ்வில் முழுமையாக ஈடுபட முடியாமல் திக்கித் திணறிப் போய் இருந்தால்.

இதனால் அவள் தேகம் மெலிர்ந்தது இதை அறியாத  அவளின் #தாய் வருந்துகிறார். என்ன நோய் வந்தது என்று தெரியாமல் பதரி போகிறாள். ஏதாவது நோய் வாய்ப்பட்டு மகளின் #உடல்நிலை சரியில்லாமல் போனால் அவளின் எதிர்கால வாழ்க்கை சரியாக அமையாது என்ற பயத்தில் மருத்துவச்சியை வரவழைத்து பரிசோதனை செய்கிறார்கள். மருத்துவரோ உடலில் எந்த நோயும் இல்லை மனதில்தான் பிரச்சினை என்று கூற தாயானவள் செய்வதறியாது திகைத்து போய் உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால் மனதில் பிரச்சனையா, இல்லை இவளுக்கு எதுவும் #பேய், #பிசாசு, #பில்லி, #சூனியம், #மந்திரம், #மாந்திரீகம், #வசியம் என்று எதிலும் சிக்கிக் கொண்டாலா என்ற #பயம் தொற்றி விடுகிறது.

இதன் காரணமாக அந்த ஊரில் இருக்கும் ஒரு பூசாரியிடம் சென்று மகளின் நிலைமையைக் கூறி அதற்கான தீர்வையும் கேட்கிறாள் அந்த பெண்ணின் தாய் அதற்குஅந்த #பூசாரி இதற்கு ஒரு #சிறப்பு #பூஜை செய்ய வேண்டும்.

அந்த பூஜையில் காளிக்கு ஒரு ஆட்டை பலியிட வேண்டும் என்று கூறுகிறார். இதை செய்து முடித்துவிட்டால் அப்பெண்ணின் #உடல் நிலை சரியாகி விடும் என்று பூசாரி கூற பூஜைக்கான ஆயத்தப்பணிகள் தயார் செய்யப்படுகிறது.

பலியிட ஆட்டுக்குட்டியை கட்டி இழுத்து வருகிறார்கள். அதை அறிந்த வள்ளல் பெருமான் மக்களின் இந்த கண்மூடிப் பழக்கமெல்லாம் மண் மூடிப் போக அங்கு புறப்பட்டு சென்றார். அப்போது அவர் ஒரு பாடலின் மூலம் மக்களின் அறியாமையை போக்க முயற்சி செய்கிறார்.

அந்த பாடல் #திருவருட்பா தொகுதியில், #இரண்டாம் #திருமுறை, #தனிப்பாசுரபகுதி #தனித்திருமாலை, #நேரிசை #வெண்பா என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது.

அந்தப் பாடலும் அதன் விளக்கத்தையும் தெரிந்து கொள்வோம்.

(1) இம்மை யறையனைய (2) வேசூர (3) மாதருமா
(4) இம்மையுமை (5) யிம்மையையோ
வென்செய்த- (6) தம்மைமதன்
(7) மாமாமா  மாமா(8)மா மாமாமா மாமாமா(9)
மாமாமா மாமாமா மா.

குறிப்பு: (1) இம்மையல் + தையல் + நைய; (2) ஏசு + ஊர; (3) மாதரும் + ஆ
(4) இம்+மை (ஆடு) உமை;  (5) இம்மை + ஐயோ; (6) அம்மை + மதன்
(7) 5 மா (அஞ்சுமா); (8) 6 மா (ஆறுமா ); (9) 8 மா (எட்டுமா) (5+6+8 = கூடுதல் 19 மா).

இப் பாடலின் விளக்கம் அவள் மனதில் இருக்கும் மையலுக்கு(காதல்) இப்பிறவியில் இந்த ஆடு என்ன பாவம் செய்தது.

நீங்கள் செய்யும் இச்செயலால் அவளின் காதலுக்கு காரணமான மன்மதனின் காதல் அம்பு தான் அஞ்சுமா? இல்லை அவள் மனதில் இருக்கும் இரணம்தான் ஆறுமா? இல்லை இந்த முயற்சிகள் தான் தலைவனான இறைவனை தான் எட்டுமா? 

என்று இந்த பாடலின் மூலம் அங்கிருந்த மக்களைப் பார்த்து நம் வள்ளல் பெருமானார் கேட்கிறார். தெய்வத்தின் பெயரால் உயிர்ப்பலி செய்தல் கூடாது இதனால் எந்த பயனும் இல்லை. என்ற உண்மை கருத்தை யாப்பில் சிறந்த நேரிசை வெண்பாவின் வழி எவ்வளவு நேர்த்தியாக மனித மனித குலத்திற்கு நினைவூட்டியுள்ளார் வள்ளல் பெருமானார்.

இந்த பதிவைப் பற்றிய உங்களுடைய கருத்துகளை கீழே பதிவு செய்யவும்.

Post a Comment

0 Comments