வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை குரு வாழ்க நாம் இன்றைய தகவலாக பிரத்தியாகாரத்தில் வரக்கூடிய மந்திர யோகம் அதாவது அட்டாங்க யோகத்தின் ஐந்தாவது அங்கமாக வரக்கூடிய பிரத்தியாகாராவில் இருக்கும் மந்திர யோகத்தில் மந்திரம் ஏன் சொல்லவேண்டும் மந்திரத்தின் வார்த்தைகளில் இருக்கும் சக்தி என்ன அந்த மந்திரங்களை சொல்வதால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பது பற்றிய முழு விளக்கத்தை பார்க்க இருக்கிறோம்.
மந்திரம் என்பதை நாம் அனைவருமே அறிவோம் கோவில்களில் குருமார்கள் சொல்வார்கள் அல்லது அர்ச்சகர்கள் சொல்வார்கள் அல்லது அமைதியாக உட்கார்ந்து பக்தர்கள் பாடுவார்கள் மனதிற்குள்ளும் சொல்லுவார்கள் இவை எதற்காக சொல்லப்படுகிறது இதை சொல்வதால் நமக்கு என்ன நடக்கிறது என்றால் நம்முடைய மனம் ஐந்து புலன்கள் வழியாக வெளி இடங்களில் பரவி நம்முடைய சக்தியை விரையம் செய்து கொண்டிருக்கிறது. அந்த ஐந்து புலன்களையும் உள்முகமாகத் திருப்பி சக்தி விரயமாகாமல் சேமிப்பதற்கான பயிற்சி தான் இந்த பிரத்தியாகார மந்திர யோகம்.
நாம் வாழக்கூடிய இந்த வாழ்வில் நாம் செய்யக்கூடிய செயல்களில் வெற்றி அடையவேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று அதற்கு நமது ஐந்து புலன்களும் ஒரு நிலையில் நாம் செய்யும் செயல்களில் ஈடுபட வேண்டும் அதோடு மனம் அலைபாயாமல் ஒரு நிலையில் இருக்க வேண்டும் அது எப்படி இந்த மந்திர யோகத்தால் நிகழ்கிறது என்பது பற்றிய முழு விளக்கமும் மேலே உள்ள வீடியோ பதிவில் கொடுத்துள்ளேன் அதை பார்த்து பயன்பெறவும் இந்த தகவல் பற்றிய கருத்துக்களை கீழே கமெண்ட் இல் பதிவுசெய்யவும்.

0 Comments