வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
குருவே துணை குரு வாழ்க
நாம் இன்றைய தகவலாக #ஆரோக்கியம் நிறைந்த #இயற்கையான முறையில் #ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்ற முழு தகவலையே தெரிந்துகொள்ள இருக்கிறோம்.
![]() |
| ஆரோக்கியம் நிறைந்த தேங்காய் பால் ஐஸ்கிரீம் |
ஆனால் இக்காலத்தில் ஐஸ்கிரீம் என்பது பால் சேர்க்காமல் செய்ய முடியாது. இயற்கை #உணவு வாசிகளுக்கு இயற்கையான முறையில் தேங்காய் கொண்டு ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்ற முழுவிவரமே இந்தப்பதிவு.
- #தேங்காய்ப் பால் - 1/2 லிட்டர்
- #ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
- #நாட்டுச்சர்க்கரை - 6 டீஸ்பூன்
- #கோதுமை மாவு - 2 டீஸ்பூன்.
இந்த 4 பொருட்களை பயன்படுத்தி அற்புதமான, மிகவும் ருசியான, மிருதுவான ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்ற செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்.
செய்முறை;
- முதலில் இரண்டு தேங்காய் பயன்படுத்தி தேங்காய் பால் அரை லிட்டர் எடுத்துக்கொள்ளவும்.
- அந்த தேங்காய் பாலை காய வைப்பதற்கு முன்பு அதிலிருந்து இரண்டு கரண்டி எடுத்து 2 டீஸ்பூன் கோதுமை மாவை அதோடு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
- பிறகு தேங்காய்ப் பாலை ஒரு கொதிநிலை வரும் வரை சுட வைக்க வேண்டும்.
- ஒரு கொதிலை வரும்போது அதில் கரைத்து வைத்த கோதுமை மாவை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
- பால் ஐஸ்கிரீம் பக்குவம் வரும் வரை அதை நன்றாக அடுப்பில் வைத்து கிளற வேண்டும் பக்குவம் அடைந்த பின் அதை இறக்கி ஆற வைத்து அதோடு நாட்டுச் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்க வேண்டும்.
- பிறகு அரைத்த மாவை ஃப்ரீசரில் இரண்டு மணி நேரம் வைக்க வேண்டும் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் அதை மிக்ஸியில் போட்டு சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.
- அப்படி மீண்டும் அரைத்த அந்த மாவை எடுத்து ஃப்ரீசரில் வைத்துவிட வேண்டும் 6 மணி நேரத்திற்கு பிறகு குளுமையான குலுகுலு ஐஸ்கிரீம் இயற்கையான ஆரோக்கியம் நிறைந்த முறையில் தயாராகி விடும்.
அதை சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
இந்த ஐஸ்கிரீம் செய்முறையின் முழு விபரம் பற்றிய வீடியோ லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது அதை பார்த்து எப்படி செய்வது என்பதை பார்த்து தெரிந்து அதை வீட்டில் செய்து ருசித்து எப்படி இருக்கிறது என்பது பற்றிய தகவலை கீழே கமெண்ட் பதிவு செய்யவும்.

0 Comments