Who is this Shiva-Kailai mountain? | Yoga with Mahe

யார் இந்த சிவன் - கைலாய மலையில் இருப்பவரா?



வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை குரு வாழ்க 

நாம இன்றைய பதிவில் எதைப்பற்றி பார்க்க இருக்கிறோம் சிவத்தை பற்றிய தகவல்கள் தான் சிவம் என்பது என்ன சிவன் மனிதனாக இருந்து தெய்வமாக மாறியவரா இல்லை தெய்வமாக இருந்து மனிதனாக உருவெடுத்துவரா இது போன்ற கேள்விகள் எல்லாம் நமக்குள் இருந்தால் அதற்கான பதிவாகத் தான் இந்த பதிவு இருக்கும்.

முதலாவதாக சிவன் என்ற பெயர் நம்முள் உதித்த உடன் சுடுகாட்டில் சாம்பலை பூசி சுற்றித்திரியும் பக்தர்களை காக்கும் கடவுள் என்ற எண்ணமே நமக்கு உருவாகும் இதற்கான காரணம் என்னவென்றால் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறை உணர்வை உணர வேண்டும் என்பதே நமது பிறப்பின் நோக்கம் அதை சுட்டிக்காட்டும் வகையில் சூத்திரமாக கொடுக்கப்பட்ட நிகழ்வுகள் தான் இவை.

அதாவது இறைவனை உணர்வதற்கு உடலை சிதையாக மாற்ற வேண்டும் அப்படி என்றால் சாக வேண்டுமா என்றால் அப்படி இல்லை நமது உடலை கொண்டு தியானம் செய்து அதனால் உருவாகும் தியான சூட்டினால் உடலை சோதியாக மாற்ற வேண்டும் அந்த நிலையே சிவத்தை அடையும் வழி என்பதை சூத்திரமாக கொடுத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.

அதோடு கைலாய வாசன், ருத்ர அவதாரம் என்ற.அனைத்துமே நமக்கு கொடுக்கப்பட்ட சூத்திரம் தான் அது பற்றிய முழுவிளக்கம் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது அதை பார்த்து அது பற்றிய தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யவும். 
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Post a Comment

0 Comments