Secret of the Palani Hill Navabashana Statue - Yoga with Mahe

பழனி மலை நவபாஷாண சிலையின் இரகசியம்.



வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை குரு வாழ்க 


நாம் இன்றைய தகவலாக பார்க்க இருப்பது போகர் சித்தர் நம் அனைவருக்கும் தெரிந்த ஒருவர் தான் அகத்தியப் பெருமானின் தலையாய சீடராவார் இவர் நமக்கு அற்புதமான மருந்து ஒன்றைக் கொடுத்து சென்றிருக்கிறார் அதை எதற்காக கொடுத்தார் அதனால் நமக்கு என்ன பயன் இருக்கிறது என்பது பற்றிய தகவலை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

அவர் கொடுத்துச் சென்ற மருந்து வேறு ஒன்றுமில்லை பழனி மலையில் இருக்கும் நவபாசன சிலை தான் இந்த நவபாஷாண சிலையை அவர் வடிவமைத்துக் கொடுத்ததற்கான காரணம் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில் இருக்கக்கூடிய நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளவும் இனி வரக்கூடிய கொடிய நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளவும் 2500 வருடங்களுக்கு முன்பே அந்த நவபாஷண சிலையை போகர் இப்போதைய வாழ்க்கைக்கும் எதிர்கால வாழ்க்கைக்கும் மக்களின் ஆரோக்யம் கருதி கொடுத்து அருள் செய்துள்ளார்.

என்னடா சொல்ற நாம வாழ்ந்துகிட்டு இருக்கும் இந்த வாழ்க்கையில் நமக்கு வரக்கூடிய நோய்களுக்கு 2500 வருடங்களுக்கு முன்பே போகர் மருந்து கொடுத்து இருக்கிறார் என்றால் நம்புகிற மாதிரியா இருக்கு என்ற கேள்வி உங்களுக்குள் வரலாம் அது பற்றிய முழு விளக்கம் மேலே உள்ள வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது அதை பார்த்துவிட்டு தங்களுடைய கருத்துக்களை கீழே காமெண்டில் பதிவு செய்யவும்.

Post a Comment

0 Comments