வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை குரு வாழ்க
நாம் இன்றைய பதிவில் பார்க்க இருப்பது நமக்கும் தாமரை பூவுக்களுக்கும் - துரிய சக்கரத்திற்கும்(சகஸ்ராரம்7thchakra) உள்ள தொடர்பை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட இந்த தீபகற்ப இந்தியாவின் தேசிய மலராக தாமரைப்பூ கருதப்படுகிறது.
இப்போது மட்டுமல்ல முன்னொரு காலத்தில் இருந்தே சித்தர்களாலும், மகான்களாலும் போற்றப்பட்ட பூக்களில் ஒன்று தாமரைப் பூ இவை சிவனுக்கு உகந்த பூ வாகவும் கருதப்படுகிறது. அதோடு சரஸ்வதி தாயின் ஆசனமாக வெண்தாமரையும், லட்சுமி தாயாரின் ஆசனமாக செந்தாமரையும் கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் புராணங்கள், இதிகாசங்கள், மருத்துவ குறிப்புகள் என்று அனைத்திலும் தாமரைப் பூவுக்கென்று தனி இடம் உண்டு இதற்கான காரணம் என்னவென்பதை தெரிந்துகொள்ளலாம்.
நம்முடைய வாழ்க்கைக்கும் தாமரைப்பூவின் வாழ்க்கைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தாமரை பூவின் வாழ்க்கையை உவமையாக வைத்தே நமது வாழ்க்கையை நாம் எப்படி வாழவேண்டும் என்பதை சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். அதை பற்றி திருவள்ளுவர் கூறுகிறார். அகத்தியர் பெருமானும் கூறுகிறார். அவர்கள் கூறிய முழு விவரமும் மேலே உள்ள வீடியோ லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து அது பற்றிய தங்களது கருத்துகளை கீழே பதிவு செய்யவும். இதேபோல் அடுத்து ஒரு நல்ல தகவல்களை சந்திக்கிறேன்.


0 Comments