வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை குரு வாழ்க ஆதரவு கொடுக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி!
நாம் இன்றைய தகவலாக பார்க்க இருப்பது நிறைய நண்பர்கள் கேள்வி கேட்டிருந்தார்கள் அதாவது எனக்கு ஆசனம் செய்ய ஆசையாக இருக்கிறது ஆனால் என்னால் ஆசனம் செய்ய முடியவில்லை உடல் பருமன் காரணமாக உடல் ஆசனங்கள் செய்வதற்கு ஒத்துவரவில்லை ஆசனங்களுக்கு தயார் செய்வதற்கான பயிற்சிகளை சொல்லவும் என்று கேட்டிருந்தார்கள் அதற்கான பதிவாகதான் இந்த தகவல் இருக்கபோகிறது.
ஆசனங்களை ஆரம்பத்திலேயே யாரும் செய்யக்கூடாது செய்யவும் முடியாது காரணம் உடல் இறுக்கமாக இருப்பது தான் முன்பெல்லாம் நாம் வேலைக்கு சென்றாலும் சரி அல்லது சிறுவர்களாக இருக்கும்போது விளையாட சென்றாலும் சரி மைதானத்திற்கு சென்று விளையாடுவோம் ஆனால் இப்போது அப்படி அல்ல சிறுவர்களாக இருந்தால் வீட்டில் மொபைல் போனில் விளையாடுகிறார்கள் பெரியவர்களின் வேலையோ உடலில் இருக்கும் ஒரு பாகத்திற்கு மட்டும் வேலை கொடுக்கும் விதம் அமைந்திருக்கிறது. அதனால் உடலின் சில பகுதிகள் இருக்கம் பெற்று விடுகிறது அல்லது பருமன் ஆகிவிடுகிறது.
அந்த இரு கங்களோடு நாம் ஆசனங்களைச் செய்தால் உடலில் தசை பிடிப்புகள் வலிகள் ஏற்படும் முதலில் உடலை தளர்வு செய்வதற்கான யோகப் பயிற்சிகளை செய்து உடலை தளர்த்தி வளையும் தன்மைக்கு கொண்டு வந்த பிறகே ஆசனங்களை பழகவேண்டும். முன்னொரு காலங்களகல் ஆசனங்கள் செய்வதற்கு சென்றால் யோகா வகுப்பில் ஆறு மாத காலம் உடலை தயார் பயிற்சிக்கு பிறகே ஆசனங்களை கற்று தருவார்கள்.
மேலே வீடியோ லிங்க் இல் உடலை ஆசனங்களுக்கு தயார் செய்வதற்கான பயிற்சிகளை எப்படி செய்வது அதை செய்வதனால் கிடைக்கக் கூடிய நன்மைகள் பற்றிய முழு விளக்கத்தையும் கொடுத்துள்ளேன் அதை பார்த்து அனைவரும் பயன் பெறுங்கள்.
இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் பயனுள்ளதாக இருந்தால் மற்ற நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும் இதேபோல் அடுத்து ஒரு நல்ல தகவலுக்காக காத்திருக்கவும்.
0 Comments