Human power - Bio Magnetic Power - Yoga with Mahe

தீபப் பயிற்சி-பதிவு - 1


உலகின் பல்வேறு இடங்களில் தீபப் பயிற்சி தவத்தின் ஆரம்ப நிலை பயிற்சியாக இன்றும் செய்யப் பட்டு வருகிறது .தீபப் பயிற்சி விளக்கு பயிற்சி என்றும் அழைக்கப் படுகிறது.

தீப பயிற்சி செய்முறை பற்றிய முழுவிவரம் வீடியோவில்; 




தீபப் பயிற்சி எண்ணெய் ஊற்றப் பட்ட விளக்கு வைத்தோ ,ஏற்றி வைக்கப் பட்ட மெழுகுவர்த்தி வைத்தோ தீபப் பயிற்சி செய்யப் படுகிறது. தீபப் பயிற்சி உடலிலுள்ள ஜீவகாந்தத்தை பெருக்கும் பயிற்சியாகவே பெரும்பாலானவர்களால் கருதப்பட்டு வருகிறது.

ஆனால் ,தீபப்பயிற்சி மூலம் பல்வேறு சக்திகளைப் பெறமுடியும் என்பதையும், தீபப் பயிற்சி மூலம் பெற்ற சக்திகளை எளிதாக சோதனை செய்தும் பார்க்க முடியும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தீபப் பயிற்சி செய்வதால் உண்டாகும் பலன்கள்:

  • 1 ஜீவகாந்த சக்தி பெருகுகிறது.
  • 2 ஆன்மா விரிவடையும் தன்மையைப் பெறுகிறது.
  • 3 ஸ்துhல உடலிலிருந்து சூட்சும உடல் தனியாகப் பிரியும் தன்மையைப் பெறுகிறது.
  • 4 சூட்சும உடல் ஆன்ம ஒளியைப் பெறுகிறது.
  • 5 சூட்சும உடல் தனித்து இயங்கும் தன்மையைப் பெறுகிறது.


தீபப் பயிற்சி செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை:


  • 1 தீபப் பயிற்சி அதிகாலை 03.00 மணி முதல் அதிகாலை 09.00 மணிக்குள் செய்ய வேண்டும்.
  • 2 தீபப் பயிற்சி அதிகாலை 03.00 மணி முதல் அதிகாலை 05.00 மணிக்குள் செய்வது உத்தமம்.
  • 3 தீபப் பயிற்சியை அதிகாலை 09.00 மணிக்கு மேல் கண்டிப்பாக செய்யக் கூடாது.
  • 4 தீபப் பயிற்சியை அதிகாலை 09.00 மணிக்கு மேல் செய்யும் பொழுது தீய ஆவிகளின் தொற்றுதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதிகாலை 03.00 மணி முதல் அதிகாலை 09.00 மணிக்குள் தீபப் பயிற்சியை செய்ய வேண்டும். அதிகாலை 09.00 மணிக்கு மேல் செய்யக் கூடாது

Post a Comment

0 Comments