Most important humans duty in Tamil 2017...................

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை குரு வாழ்க 

நாம் இந்த பதிவில் பார்க்க இருப்பது கடமை என்ற ஒரு வார்த்தையின் முக்கியதுவம் பற்றிய தகவலை தான் தெரிந்துகொள்ள இருக்கிறோம். 



நாம் இந்த உலகில் பிறந்திருக்கிறோம் ஒருநாள் இந்த உலகத்தை விட்டுச் சென்று விடுவோம் என்பது மறுக்க முடியாத உறுதி. வரும்போது அழுகையோடு வருகிறோம். செல்லும் போது அந்த அழுகையையும் கூட மற்றவர்களிடம் கொடுத்து விட்டுச் செல்கிறோம். எதையும் இங்கிருந்து எடுத்துச் செல்ல இயலாத நிலை.

இந்த உலகில் நாம் அனைவருக்கும் ஒரு சில சூழ்நிலையில் காரணங்களாக பலவிதமான கடமைகள் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறது. அதாவது நமக்கும் இந்த சமுதாயத்திற்கும், நம்மைப் பெற்றெடுத்த தாய் தந்தையர்க்கு செய்ய வேண்டிய கடமை, நமது உடலுக்கு செய்யவேண்டிய கடமை, நமக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதற்காக உழைக்கும் மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமை,  நாம் தொழிலுக்காக ஓர் இடம் விட்டு மற்றொரு இடம் பயணம் செய்கிறோம். அதற்கு தேவையான போக்குவரத்து வாகனம் மற்றும் சாலை வசதிகள் இது போன்ற விஷயத்தை சமுதாயம் தான் நமக்கு செய்கிறது ஆகையால் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகள்.

அடுத்ததாக இயற்கை அன்னைக்கு செய்ய வேண்டிய கடமை இயற்கை சீற்றம் ஏற்பட்டால் மனிதனின் நிலை என்ன ஆகும். கொஞ்சம் நினைத்துப்பாருங்கள் ஆக்சிசன் கொடுப்பதை மரங்கள் நிறுத்தி விட்டால் மூச்சுவிட சுவாசம் செய்ய நாம் எங்கு செல்வோம் யாரிடம் பிச்சை கேட்போம் மனிதர்களால் உருவாக்க முடியாத, தர இயலாத பல விதமான உபாயங்களை இயற்கை அன்னை நமக்கு தந்து அருள்கின்றது அதை மனதில் வைத்து அதை அழிக்காமல் அதை புண்படுத்தாமல் அதற்கு எதிர்மறையான செயல்களைச் செய்யாமல் இயற்கையைக் காக்கும் பொருட்டு நமது வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே நம்முடைய பெரும் கடமை ஆகும். 

அதை மறந்து இருக்கிறோம் என்பது இன்றைய காலகட்டம் நமக்கு உறுதிப்படுத்துகிறது. இவை அனைத்தையும் நம் மனதில் வைத்து நாம் வாழ்க்கையை வாழவேண்டும் கடமையைச் செய்ய வேண்டும் நமது உடலுக்கு செய்யவேண்டிய உடற்பயிற்சிகளை நாம் தினசரி கடமையாக செய்ய வேண்டும். நம்மை சார்ந்தவர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகளைச் செய்து தரவேண்டும். நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் உறுதுணையாக இருக்கும் சமுதாயத்திற்கு நன்றி செலுத்த வேண்டும். சமுதாயத்தையும் சேர்த்து அனைத்து உயிர்களுக்கும் சமமாக கொடையளிக்கும் இயற்கையை மதித்துணர்ந்து அதை சார்ந்த வாழ்க்கை வாழ்வதே நமது வாழ்வின் நோக்கம் என்பதை புரிந்து நாம் கடமையாற்ற வேண்டும் என்பதே இந்த கடமை என்னும் தொகுப்பில் நினைவூட்டுகிறோம்.

Post a Comment

0 Comments