Again heating the eating food! good?or bad?

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை குரு வாழ்க 

நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ள இருப்பது நாம் இன்று உண்ணக்கூடிய உணவு கள் பெரும்பாலும் சமைக்கப்பட்ட உணவாகவே இருக்கிறது. இவ்வாறு சமைத்து உண்பது நன்மை தருமா அல்லது தீமை தருமா என்பது பற்றியும் சமைத்த உணவை மறுநாள் வரை அல்லது இரண்டு மூன்று நாட்களுக்குக் குளிர் சாதன பெட்டியில் வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் கேடுகள் பற்றியும் தான் இந்த குறிப்பில் தெரிந்துகொள்ள இருக்கிறோம்.



இன்றைய நவீன உலகத்தில் உணவு சமைப்பது என்பது பெரும் சுமையாக மாறி விட்டது. அதுமட்டுமின்றி சமைத்த உணவுகளை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக மாவுப்பொருட்கள் மற்றும் மசாலா குழம்பு பொருட்களை குளிர்சாதன பெட்டியில் பயன்படுத்துவதால் நமக்கு பலவிதமான இன்னல்களை உருவாக்கும் ஆரோக்கியக் கேடுகள் உருவாகிறது.

உருளைக்கிழங்கில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது புரதச் சத்துக்களும் நிறைந்து உள்ளது அதை பிரிட்ஜில் வைத்து சமைத்து சாப்பிடுவதால் அதில் உள்ள உயிர்ச்சத்துகள் கெட்டு விடுகிறது இதனால் நமக்கு உடலில் கொழுப்புகளை சேர்க்கும் சத்துக்களை உடலுக்கு கொடுக்கிறது.

காய்கறிகளை அரை வேக்காட்டில் சூடேற்றி சாப்பிடுவதால் மட்டுமே உயிர் சத்துக்கள் போதுமான அளவு உடலுக்கு கிடைக்கிறது என்பதை இன்றைய விஞ்ஞானமே உறுதிப்படுத்தியுள்ளது. நாம் அந்த காய்கறிகளை மசாலா சேர்த்து அதிக நேரம் சூடேற்றுவது மட்டுமல்லாமல் அதை இரண்டு மூன்று நாட்களுக்குக் குளிர் சாதன பெட்டியில் வைத்து உண்பதால் உடலுக்கு பலவிதமான இன்னல்களை உருவாகிறது என்பதையும் இன்றைய விஞ்ஞானம் உறுதிப்படுத்தியுள்ளது.

உடலுக்கு ஆரோக்கியமான உணவு என்பது இயற்கை கொடுக்கும் உணவுகள் மட்டுமே சூரிய அடுப்பினால் சூடேற்றும் உணவுகள் பழம், காய்கறிகள், பச்சையாக உண்ணக்கூடிய பொருட்கள் மட்டுமே உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது. மற்ற அனைத்தும் அரைகுறை ஆரோக்கியத்தை மட்டுமே நமக்கு கொடுக்கிறது என்பதை இந்த பதிவின் மூலம் உங்களுக்கு நினைவூட்டி கொள்கிறோம். இந்த பதிவைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை கீழே கமெண்ட் இல் பதிவுசெய்யவும்

Post a Comment

0 Comments