வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை குரு வாழ்க
நாம் இந்த பதிவில் நெல்லிக்காயை உண்பதற்கான காரணமும் அதை உண்பதால் நமக்கு கிடைக்கும் பயன்கள் பற்றிய முழு தகவல் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
நெல்லிக்கணி இயற்கை அன்னையால் அருளப்பட்ட அற்புதமான மருத்துவ பயன்கள் கொண்ட கனி இதனை ஆதிகாலத்தில் யூனானி, ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம் போன்ற மருத்துவ குறிப்புகளில் அதிகம் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
ஏன் நமது முன்னோர்கள் கூட என்றும் வீட்டில் இருக்கக் கூடிய உணவாக நெல்லிக்காயை பயன்படுத்தி வந்தார்கள். எப்பொழுதும் வீட்டில் நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லி வற்றல், நெல்லிமரப்பா என்று பலவிதமான நெல்லிக்காயினாள் ஆன தின்பண்டங்களை வீட்டில் வைத்திருப்பார்கள். ஏனென்றால் அது ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான உணவு என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது. நெல்லி மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் பெற்றிருந்தாலும் நெல்லிக்காயில்தான் அதிக அளவு ஊட்டச்சத்துகளும், உயிர்ச்சத்துகளும் நிறைந்துள்ளது. மேற்கொண்டு முழுஸதகவல்கள் மேலே உள்ள வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து அனைவரும் பயன் பெறுவோம்.
0 Comments