How to make weight loss in natural tips in Tamil

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை குரு வாழ்க 

நாம் இந்த பதிவில் இன்று இளைஞர்கள் நிறைய பேர் உடல் பருமனால் அவதிக்கப்பட்டு வருகிறார்கள். உடல் எடையை குறைப்பதற்கு பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டும் வருகிறார்கள். அவர்கள் எளிமையான முறையில் இயற்கை முறையை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கும் சில தகவல்களை மட்டுமே இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். 




முதலாவதாக நெல்லிக்காயை சிறிதாக நறுக்கி நன்றாக நசுக்கி சாறு எடுத்து அதோடு இஞ்சி சாறு சிறிது சேர்த்து காலை வெறும் வயிற்றில் பருகி வந்தால் நமக்கு உடல் பருமன் குறையும்.

இரண்டாவது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் என்றழைக்கப்படும். இது மூன்றையும் பொடியாக்கி சம அளவு விறக்கடி அளவு காலை வெறும் வயிற்றில் வெந்நீரில் கலந்து குடித்துவந்தால் நமக்கு உடல் எடை குறையும். உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளும் வெளியேற்றும்.

மூன்றாவதாக இரவு தூங்குவதற்கு அரை மணி நேரம் முன்பு சிறிது வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து பருகி வந்தால் உடல் எடை குறையும்.

நான்காவதாக அருகம்புல் சாறு தினமும் வெறும் வயிற்றில் காலை 10 மில்லி அளவு மட்டுமே குடிக்க வேண்டும் அந்த அளவுதான் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அதன் மேல் அதிகமானால் அது உடலுக்கு கேடு விளைவிக்கும் ஆண்மை குறைவை ஏற்படுத்தும் 10ml மட்டுமே உடலுக்கு உகந்தது ஆகையால் அருகம்புல் சாறு 10 ml மட்டும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

மற்றும் ஒரு சில குறிப்புகள் மேலே வீடியோ லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது அதைப் பார்த்து அனைவரும் பயன் பெறவும்.

இத்தகவல்கள் நம்முடைய இயற்கை முறைகளை தெரிந்து கொள்வதற்காக மட்டுமே இதைப் பயன்படுத்துபவர்கள் தக்க ஆலோசனை பேரில் சித்த மருத்துவரின் உதவியோடு கையாளவும்.

Post a Comment

0 Comments