Miras yoga technique || osho story || @yogawithmahe


கிருஷ்ண பக்தையான மீராவின் வாழ்வில் ஒரு சுவையான நிகழ்ச்சி.


கண்ணனின் பிறப்பிடமான பிருந்தாவனத்திற்கு அவள் சென்றபோது, அவளை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டார்கள். அந்தக் கோயிலில் பெண்களுக்கு அனுமதி இல்லை. அந்தக் கோயிலின் தலைமைப் பூசாரி பெண்களைக் கண்ணால்கூடப் பார்க்க மாட்டார் என்று சொன்னார்கள்.

அந்தப் பூசாரி, அந்தக் கோயிலின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின், ஒரு பெண்ணைக் கூடப் பார்க்க வில்லையாம்!அப்படியொரு விரதம்! மீரா அதை எதிர்த்தாள். அவள் சொன்னது மிகவும் முக்கியத்துவமுடையது. 

“எனக்குத் தெரிந்த வரையில், இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒரே ஆண்மகன் கண்ணன் தான்! இன்னொரு ஆண்மகன் எங்கே வந்தான், பூசாரியாக? *அந்தப் பூசாரி எவ்வாறு ஆண்பிள்ளையாகவும் இருந்து கொண்டு கிருஷ்ண பக்தராகவும் இருக்க முடியும்?”* என்று கேட்டாள் மீரா.

மீராவின் இந்தப் பேச்சு தலைமைப் பூசாரியின் காதுக்குப் போயிற்று. அவர் பேச்சற்றுத் திகைத்துப் போய் விட்டார். உடனே அவர் கோயில் வாயிலை நோக்கி ஓடினார். கதவுகளை விரியத் திறந்தார். மீராவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

“அம்மா! எனக்கும் என் பிரபுவுக்குமான உறவை எனக்கு நினைவூட்டியதற்கு நான் பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்,” என்றார் அவர். பெண் மனங்களுக்காகவும், நம்பிக்கை மனங்களுக்காகவும், சரணாகதி மனங்களுக்காகவும் கண்ணன் காத்திருக்கிறான்.

ஆனால், மகாவீரர் ஆண் மனதின் பிரதிநிதி. ஆக்கிரமிப்புக் கொண்ட, அதிகார மனங்களின் பிரதிநிதி. அதனால், பெண்கள் மோட்சமடைவது பற்றி அவரால் நினைக்கவே முடியவில்லை. அதனால், பெண் அடியார்கள் ஆண் பிறப்பு எடுத்தபின்புதான் மோட்சம் அடைய முடியும் என்று சமண சமயம் கூறுகின்றது.

மகாவீரர் வழி ஒன்றுதான் இந்த உலகில் இருக்கு மென்றால், பெண்குலம் தெய்வத்தை அடைதல் சாத்தியமே இல்லாமல் போய்விடும்! அது, ஆண்மனதை, ஆக்கிரமிப்பு மனோபாவத்தைத்தான் காட்டுகிறது.

அதேபோல, ஆண்மனம் கண்ணனிடம் செல்லுபடியாகாது. அவனுடைய பாதை அன்பின் பாதை, நம்பிக்கையின் பாதை, சரணாகதியின் பாதை. 

உளவியல் அடிப்படையில் - இந்த உலகில் காணப்படும் இரண்டு முன்மாதிரிகள் இவை. எல்லாமே இந்த இரு வகையில் அடக்கம்.

https://youtu.be/UNE5vhKyysg

@mahendrannagaraj #yogawithmahe #spiritualjourney 

Post a Comment

0 Comments