kavuni arisi benefits/ karuppu kavuni benefits tamil @yoga with mahe

kavuni arisi benefits/ karuppu kavuni benefits tamil:- கருப்பு கவுனி அரிசியில் இயற்கையாகவே அதிக அளவில் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் தன்மை கொண்ட ஒரு உணவு பொருளாகும். இந்த கருப்பு அரிசியில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களைப் போக்க உதவுகிறது.


🌷இன்றைய காலத்தில் பொதுவாக எல்லா உணவுகளும் ‘அரிசியால்’ செய்யப்பட்டு வருகிறது. அதிகளவு அரிசி உண்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது. இது உண்மை தான். இருப்பினும் இப்போது நாம் பார்க்கக்கூடிய அரிசி உடல்நலத்திற்கு எந்த தீங்கும் இல்லாமல் நன்மையை விளைவிக்கக் கூடிய Wild Rice என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கருப்பு கவுனி அரிசி ஆகும். 

🌷இதய ஆரோக்கியம் :கருப்பு கவுனி அரிசியில் உள்ள அதிக அளவு நார்ச்சத்தானது, ‘LDL’ என்ற கெட்ட கொலஸ்ட்ரால் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. இதனால் உண்டாகும் இருதய பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கிறது. எனவே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் ஒரு வேளை கருப்பு கவுனி அரிசியை உட்கொள்ளவது அவசியம் ஆகும். 

🌷நீரழிவு நோய் :மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி கருப்பு கவுனி அரிசி டைப் 2 நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும் என்கின்றனர். ஆய்வின் படி, இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கருப்பு கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. 

🌷புரதச்சத்து :வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும் போது, கருப்பு கவுனி அரிசியில் அதிக புரதச்சத்து அடங்கி இருக்கிறது. இது உடலில் தசைகளை உருவாக்குவதிலும், உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது. 

🌷பக்க விளைவுகள் :கருப்பு கவுனி அரிசியில் ஈயம், ஆர்சனிக் மற்றும் காட்மியம் போன்ற கன உலோகங்கள் இருப்பதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு தெரிவிக்கின்றது. இந்த அரிசியினை அதிக அளவில் உட்கொண்டால், ஆபத்து ஏற்படும். எனவே, இதனை சரியான அளவில் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

🌷உடல் ஆரோக்கியம் :நிபுணர்களின் கூற்றுப்படி, கருப்பு கவுனி அரிசியில் குறைவான அளவில் கலோரிகள், கொழுப்புகள் மற்றும் சர்க்கரைகள் அடங்கியிருக்கிறது. அதோடு அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளது. இதனை உணவாக அன்றாடம் எடுத்துக்கொள்வதால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் உடல் எடையை குறைக்க விரும்புவர்களும் கருப்பு கவுனி அரிசியை தாராளமாக எடுத்து கொள்ளலாம்.

My YouTube link :- https://youtu.be/9fL7MJfG5Xs

Post a Comment

0 Comments