https://youtu.be/CzSsD9y5MnE
தமிழ்நாட்டில் வரும் 26-ஆம் தேதி வளைய சூரிய கிரகணம் நிகழவுள்ளது. அதனைக் காண, உலகிலுள்ள வானியல் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் என பலர் தமிழ்நாட்டில் முகாமிட்டுள்ளனர்.
பூமிக்கும், சூரியனுக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் நிலவு வரும் போது அதன் நிழல் பூமியின் மீது விழும் நிகழ்வு சூரிய கிரகணமாகும். சூரியன் முழுவதும் நிலவால் மறைக்கப்படுவது முழு சூரிய கிரகணம். மையப்பகுதி மட்டும் மறைக்கப்பட்டு, சூரியனின் விளிம்பு பிரகாசிப்பது வளைய சூரிய கிரகணம் அல்லது கங்கண சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது.
இந்த அறிவியல் அதிசயம் வரும் 26-ஆம் தேதி தமிழ்நாட்டில் நிகழவுள்ளது. கிழக்கு வானில் உதயமாகும் சூரியனை மேற்கு பக்கத்தில் இருந்து நிலவு மறைக்கத் தொடங்கும். காலை 8 மணியளவில் தொடங்கும் இந்த நிகழ்வு பகல் 11 மணி 11 நிமிடங்கள் வரை ஏறக்குறைய 3 மணி நேரம் 30 நிமிடங்கள் நீடிக்கும். ஆனால், சூரியனின் மையப்பகுதியை நிலவு மறைப்பதால் வானில் தோன்றும் நெருப்பு வளையத்தை காலை 9.35 மணிக்கு சுமார் 2 நிமிடங்கள் மட்டுமே காணமுடியும். அதன்பின் நிலவு விலகத் தொடங்கிவிடும்.
இந்த தருணத்தில் ஆகாசத்தில் நிகழும் நிகழ்வு அதனால் அங்கு உருவாகும் ஆற்றல் அப்போது நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் செய்யக்கூடாத விஷயங்கள் என்று முன்னோர்கள் வகுத்து கொடுத்துள்ளனர் அது பற்றிய முழு விளக்கம் மேலே உள்ள வீடியோவில் கொடுத்துள்ளேன் அதை பார்த்து அதைப் பற்றிய கருத்துகளை கீழே பதிவு செய்யவும்.

0 Comments