வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஆதரவு கொடுக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி
நாம இன்னைக்கு எதை பற்றிய தகவலை பார்க்க இருக்கம்னா நாம பாலாசனம் எப்படி செய்வது அதை செய்யுறதுனால கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன என்ற தகவலை தான் பார்க்க இருக்கோம். பாலாசனம் என்றால் குழந்தை முதன்முதலாக எப்படி உட்காருமோ அப்படி உட்காரும் முறை என்று பொருள். இந்த ஆசனத்தை செய்வது மிக எளிது. இது மன அழுத்தத்தை நீக்கும் அற்புத ஆசனம் எனலாம்.
செய்முறை :- இரண்டு கால்களையும் மடக்கி அதன் மேல் உட்காரவும். அதன்பின் இரண்டு கைகளையும் முன்னோக்கி நீட்டி குழந்தைகள் படுப்பதுபோல நெற்றி தரையில் படும்படி குனியவும்.
மூச்சை சீராக விடவும். இதே நிலையில் 15 முதல் 20 வினாடிகள் அமரவும். பிறகு மெதுவாக நேராக நிமிர்ந்து உட்காராவும். சில வினாடிகள் ஓய்வுக்குப்பின் மீண்டும் முன்போல் பயிற்சி எடுக்கவும். 5 அல்லது 6 தடவை பயிற்சி செய்யலாம்.
பயன் :-இது மன அழுத்தத்தை நீக்குகிறது. தண்டுவட நரம்புகளுக்கு வலிமை கொடுக்கிறது. முதுகு வலியை நீக்குகிறது. உணவு செரிமானம் ஆகும் திறனை அதிகரிக்கிறது. தொப்பையை நீக்குகிறது. வயிற்றுக் கோளாறுகளை நீங்குகிறது. கால் முட்டி முதல் பாதம் வரை பலம் பெறுகிறது.

0 Comments