செய்யும் செயல்களில் வெற்றி பெற;
நினைத்தது நடக்க இந்த மூன்று விஷயங்களை தவறாமல் தூக்கத்தில் இருந்து எழுந்தவுடன் செய்யுங்கள்.
![]() |
| #Lifeyogam |
நமது வார்த்தைக்கு அதிக படியான அதிர்வுகள் இருக்கு அதை நாம் சரியாக பயன்படுத்துவது இல்லை. நமது வார்த்தையை சரியாக பயன் படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். முறையாக வார்த்தைகளை பயன்படுத்தினால் மட்டுமே அவை முழு பலத்துடன் செயல் படும். அந்தவகையில் வார்த்தையை பயன்படுத்தும் பலப்படுத்தும் முறைகளை முதலில் தெரிந்து கொள்வோம்.
வார்த்தையின் வலிமை;
நமது வார்த்தை களின் வலிமை அதிகரிக்க முதலில் மௌனத்தை கடைபிடிக்க வேண்டும் மௌனமாக இருந்து நிதானமாக வரும் வார்தைக்குக்கு அதிக சக்தியுண்டு ஒருகூட்டத்தில் பேச போவதற்கு முன் மௌனத்தை கடைபிடித்து பிறகு பேசினால் நம் வார்த்தை கேட்பவர்களின் மனதில் பதியும் அதனாலதான் யோகிகள் எப்பொழுதும் மௌனத்தில் இருப்பார்கள் அவர்கள் வார்த்தை பழிக்கின்றது மக்கள் அவர்களின் வார்த்தைக்காக காத்துக்கிடக்கின்றனர்.
ஆகையால் நாம் 5 மணிக்கு எழுந்தாள் 7 மணிவரை மௌனமாக இருந்து பிறகு நேர்மறையான வார்த்தைகளை கண்ணாடி முன் நின்று பேசுங்கள் அதாவது இன்று நான் செய்யும் அணைத்து காரியத்திலும் வெற்றி பெறுவேன், எனது செயல்கள் அனைத்தும் நன்மையிலேயே முடியும், நான் விரும்பியது இன்று நிறைவேறும் என்று நேர்மறையான வார்த்தைகளை பேசிப்பழகுங்கள்.
எழுந்தவுடன் பார்க்க வேண்டியது;
அடுத்ததா நீங்க எழுந்தவுடன் முதலில் உங்கள் மனதுக்கு பிடித்தவை அதாவது அது நபராக இருக்கலாம் அல்லது கடவுளாக இருக்கலாம் அல்ல வேறுஏதாவது ஒன்றாக இருக்கலாம் மொத்தத்தில் உங்கள் மனதுக்கு மகிழ்ச்சியை கொடுக்க கூடிய விஷயங்களை பாருங்கள்.
எழுந்தவுடன் தொடக்கூடிய பொருள்;
அடுத்ததாக நீங்கள் தொடவேண்டியது நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும் பொருளாக இருக்கும் அதுபோன்றவை இரவே ஒருபாத்திரத்தில் நிறைவூற்றி அதை வெட்ட வெளியில் வைத்து அதை தொட்டு முகம் கழுவலாம் அல்லது பிடித்த தெய்வத்தின் உருவச்சிலை அல்லது புகை படங்களை தொடலாம் இந்த மூன்று செயல்களை தொடர்ச்சியாக பழக்கப்படுத்தினால் உங்கள் வாழ்க்கையில் எல்லாத்தினமும் வெற்றியாக அமையும் இது மகான்களின் வாக்கு
- Web Title: secrat of human power
- Get Spiritual News in Tamil, latest spiritual news updates in Tamil and devotional news in Tamil. Stay updated with # Lifeyogam to get Latest Tamil News
உங்கள் கருத்தை எழுதவும்

0 Comments