கோயில் என்பது மனித வாழ்க்கைக்கான சூத்திரம்.
முழு விளக்கம் வீடியோவில்
நம்முடைய முன்னோர்கள் மகா யோகிகள் மட்டுமில்லை, மாபெரும் விஞானிகளும் கூட காரணம் அவர்கள் நமக்கு கொடுத்து சென்ற அனைத்தும் நமது வாழ்வின் நோக்கங்களை எளிதில் அடையும் தத்துவங்களை உள்ளடக்கியது. அதை உணர்ந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கலாக அனைவரும் திகழ்ந்தாலும், புரிந்துகொள்ள முயற்சிப்பவர்கள் ஒரு சிலரே, மற்றவர்கள் உணர மறுக்கிறார்கள், மறந்தும் போகிறார்கள். அதில் கோவில் உண்டானதற்கான தகவலை இப்போது தெரிந்து கொள்வோம்.
கோயில் என்பது, கடவுளை வணங்குதல், வேள்விகள் நடத்துதல் போன்ற சமயம் சார்ந்த அல்லது ஆன்மீக நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கட்டிடத்தைக் குறிக்கும். மிகப் பழைய காலத்தில் இருந்தே இந் நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கோயில்கள் உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ளன.
தமிழில் கோயில்[கு 1] என்னும் சொல் கோ + இல் எனும் இரண்டு சொற்களின் சேர்க்கையால் உருவானது. இங்கே கோ என்பது இறைவனையும், இல் என்பது இல்லம் அல்லது வீடு என்பதையும் குறிக்கும். எனவே கோயில் என்பது "இறைவன் வாழுமிடம்" என்னும் பொருள் தருகிறது.
The Temple is the Formula for Human Life
0 Comments