Tips for Healthy Hair & Density Hair - Yoga with Mahe

தலை முடிக்கு வெங்காயத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் : வெங்காயத்திற்கு நுண் கிருமிகள் மற்றும் பூஞ்சையை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது. இதை தலை முடியில் பயன்படுத்துவதால் முடி கொட்டுவது தடுக்க படுகிறது. 

 

 முடியின் வேர்கால்களுக்கு ஊட்டச்சத்து கொடுத்து தலை முடி இழந்த ஊட்டச்சத்தை திரும்ப உதவுகிறது. சல்பர் அதிகமாக இருப்பதால் முடி உடைவதையும், அடர்த்தி குறைவதையும் தடுக்கிறது. பாக்டீரியாவை எதிர்த்து போராடும் தன்மை இருப்பதால்,உச்சந் தலையில் ஏற்படும் தொற்றுக்களை எதிர்த்து போராடும். இதனால் முடி கொட்டுவது குறையும்,இதிலிருக்கும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் இளநரையை வர விடாமல் செய்யும். 

வெங்காயத்தை தொடர்ந்து பயன்படுத்தும்போது முடிக்கு பளபளப்பு அதிகமாகிறது. தலை மற்றும் கழுத்து பகுதியில் புற்று நோய் வரும் அபாயத்தை குறைக்கிறது.பேன் தொல்லை குறைகிறது. வெங்காய சாறு பயன்படுத்துவதால் முடியில் அடர்த்தி அதிகரிக்கும். இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால், முடி வளர்ச்சிக்கு ஏதுவாகிறது. பொடுகு தொல்லைக்கு சிறந்த ஒரு தீர்வு.

Post a Comment

1 Comments

  1. Thanks for sharing the post.. parents are worlds best person in each lives of individual..they need or must succeed to sustain needs of the family.
    best yoga poses for weight loss

    ReplyDelete