Medicinal value of Turmeric and Milk (YOGA IN TAMIL)
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள் மற்றும் இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பால் மற்றும் மஞ்சளின் மருத்துவகுணம் பற்றி பார்கலாம்
நாம் தினமும் பருகும் பாலில் சிறிது மஞ்சள் தூள் கலந்து சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றிய முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்க இருக்கிறோம்.
இயற்கையாகவே மஞ்சளிலும் பாலிலும் ஆன்ட்டிபயாட்டிக் என்று சொல்லக்கூடிய நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் ஆகையால் அதை நாம் இணைத்து பருகும் போது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தேவைக்கு தகுந்தாற்போல் எப்போதும் இருக்கும்.
மஞ்சளினால் கிடைக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி அபாயகரமான சூழ்நிலைகளில் அதாவது நச்சுகள் நிறைந்த இடங்களில் இருந்தாலும் நம்மை அந்த நச்சுகளிலிருந்து பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது.
மஞ்சள்தூல் வைரஸ் தொற்று, பாக்டீரியா பாதிப்பு அதோடு உடல் சூட்டினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அனைத்தையும் சரி செய்யும் தன்மை கொண்டது.
0 Comments