வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள் மற்றும் இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், நமது நரம்புமண்டலத்தை பலபடுத்தும் மருத்துவம் என்னவென்று பார்போம்.
நம்முடைய நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை ஒட்டியே நமது உடல் உறுப்புகளின் செயல்பாட்டின் ஆரோக்கியம் அமைந்திருக்கிறது. ஆகையால் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமான முறையில் பாதுகாக்க வேண்டியது நமக்கு மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது.
முதலில் நரம்பு மண்டலத்தை பாதுகாக்க நினைத்தால் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு எவ்வாறு உருவாகிறது. என்பதை நாம் கண்டறிய வேண்டும் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு வருவதற்கு இரண்டு காரணங்கள். முதுகுத்தண்டில் அடி, அல்லது அழுத்தம் ஏற்படுவதன் மூலமே நரம்பு மண்டலத்தில் பாதிப்பு உண்டாகிறது.
சிறுவயது விளையாட்டின்போதும், நமது வேலைப்பளுவின் காரணமாகவும் முதுகுத்தண்டில் அழுத்தம் மற்றும் அடி உருவாகக்கூடும். ஜிம் உடற்பயிற்சியில் அதிகமான எடை தூக்குதலின் போதும் இது போன்ற பிரச்சனைகள் உருவாகும். மற்றும் மன அழுத்ததின் காரணமாகவும் உடலில் நரம்பு மண்டலத்தில் ஆரோக்கிய கேடு உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மற்றொரு விஷயத்திலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். உடலில் இயல்புத் தன்மை மாறி உடல் மற்றும் மனதில் இறுக்கம் உண்டானாலும் நரம்புத் தளர்ச்சி உருவாகும். அதனால் நாம் தொடர்ந்து உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சிகளை தினசரி கையாள வேண்டும். அப்படி இருக்கும் போது உடலில் வளையும் தன்மையும் உடலின் இயல்பு தன்மை மாறாமல் அப்படியே இருக்கும்.
அடுத்ததாக உடலுக்குத் தேவையான உயிர்ச்சத்துகளையும், ஊட்டச் சத்துக்களையும் கொடுக்கும் இயற்கை உணவுகளை உண்ணாமல் இருப்பதே நரம்புத் தளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இன்றைய காலகட்டத்தில் ஊட்டச்சத்துகள் மற்றும் உயிர்ச்சத்துகள் நிறைந்த உணவு கிடைப்பது அரிதாகிவிட்டது. ஆகையால் வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் நம் வீட்டில் அமைத்து அதில் பூச்சி மருந்துகள் கலக்காமல் இயற்கை உரங்களை பயன்படுத்தி நமக்கு தேவையான உணவுப் பொருட்களை உருவாக்கி உண்டு வந்தாலும் நமது நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
சரி இப்போது நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டால் எப்படி நரம்பு மண்டலத்தில் பிரச்சினை இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வது. என்பது பற்றிய தகவலும், அதை எளிமையான முறையில் வீட்டில் அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் உணவுப் பொருட்களை பயன்படுத்தி சரி செய்யும் முறைகள் பற்றிய தகவலும் மேலே வீடியோ லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. அதை அனைவரும் பார்த்து பயன்பெறுங்கள் இதேபோல் இன்னொரு தகவலில் உங்களை சந்திக்கிறேன்.
0 Comments