How to Simple Natural Ways White Hair Darkens in Three Months
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை குரு வாழ்க
நாம் இந்த பதிவில் இன்றைய இளைஞர்களுக்கு அதிகமான முடி உதிர்தல் பிரச்சனை இருந்து வருகிறது. அதை சரிசெய்வதற்கான இயற்கை வைத்திய முறைகளைப் பற்றிய தகவலை இன்று நாம் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.
முடி உதிர்தல் பிரச்சினை என்பது இன்று பெரும்பாலான நபர்களுக்கு இருந்து வருகிறது அது ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி முடி உதிர்தல் என்பது இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதை எளிமையான முறையில் சரி செய்து கொள்ளலாம்.
முதலில் முடி உதிர்தல் பிரச்சனை என்பது நம்முடைய பரம்பரை வழியாக அதாவது முன்னோர்கள் வழிகளில் வந்திருக்கும் என்று பலர் கூறுவார்கள். ஆனால் அது உண்மை கிடையாது. நம்முடைய முன்னோர்கள் அனைவருமே ஜடை பின்னும் அளவுக்கு தலைமுடியை வளர்த்து இருந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. முடி உதிர்வு பிரச்சனைக்கு மூலக்காரணம் இப்போது இருக்கக்கூடிய இந்த நவீன சூழ்நிலையும் உணவு முறையும் தான் முக்கிய காரணம் அதோடு மனநிலையும் முடி உதிர்தல் பிரச்சனைக்கு மிகப் பெரும் காரணமாக இருக்கிறது.
முதலில் மனதை அமைதியாக வைத்துக் கொள்வதற்காக நாம் பலவிதமான யோகப் பயிற்சிகளையும் மூச்சுப் பயிற்சிகளையும் கையாள வேண்டும். அதன் பிறகே நாம் உடலுக்கு எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் வெளியில் நாம் தலைமுடிக்காக பயன்படுத்தும் பொருட்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த பதிவில் நாம் கூந்தலின் ஆரோக்கியத்திற்காக பயன்படுத்த கூடிய அனைத்து நுட்பங்களும் சித்தர்களால் நமக்கு அருளப்பட்டவை அதாவது இயற்கை நமக்கு தந்த களி மண் குளியல் போன்ற இயற்கை உபாயங்களை மட்டுமே தெரிந்து கொள்ளலாம். அது பற்றிய முழு தகவல் வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.
0 Comments