சமைப்பவர்களும் சாப்பிடுபவர்களும் கவனிக்க வேண்டியவை கருடபுராணம் கூறும் உண்மை. - Yoga with mahe


வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை குரு வாழ்க நாம் இன்றைய தகவலாக பார்க்க இருப்பது நாம் உண்ணும் உணவுக்கும் நம்முடைய குணங்களும் சம்பந்தம் உண்டு என்பது நமக்குத் தெரியும் ஆனால் நமக்கு உணவு தயார் செய்பவர்களின் சூழ்நிலை மற்றும் மனநிலைக்கு தகுந்தவாறு நமது குணம் மாறும் என்பதை உங்களால் நம்பமுடிகிறதா கருட புராணம் இதை உண்மை என்கிறது அதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.


சொர்க்கம் நரகம் இரண்டும் நமக்கு தெரியும் புண்ணியம் செய்திருந்தால் சொர்க்கத்துக்கு செல்வோம் பாவம் செய்திருந்தால் நரகத்துக்கு செல்வோம் இந்த பாவமும் புண்ணியமும் நாம் செய்யும் செயல்களின் விளைவாக இருக்கிறது அப்படி நாம் செய்யும் செயல்கள் நமது குணங்களின் அடிப்படையில் வெளிப்பக்கூடியது. குணங்களோ நாம் உண்ணும் உணவோடு சம்பந்தப்பட்டது
நாம் அன்றாடம் உணவு உண்ணுகிறோம் ஆனால் எப்பொழுதும் வீட்டில் மட்டுமே உணவு உண்போம் என்று உறுதியாக சொல்ல இயலாது அவ்வப்போது சூழ்நிலை காரணங்களால் வெளியிடங்களில் உணவு உண்ணக் கூடிய சூழ்நிலை வரும் அது போன்ற சமயங்களில் எங்கெங்கெல்லாம் உணவு உண்ணலாம் எங்கெங்கெல்லாம் உணவு உண்ணக்கூடாது என்ற தகவலை கருட புராணம் கூறுகிறது. காரணம்.

நமது எண்ணங்களையும் சொல்லையும் நீரானது அப்படியே வாங்கிக் கொண்டு அதற்குத் தகுந்தாற்போல் எதிரொலிக்கும் என்பது இன்றைய விஞ்ஞானமே உறுதிப்படுத்தியிருக்கிறது அதன்படி நீர் இல்லாமல் உணவு தயார் செய்ய முடியாது ஆகையால் உணவை தயார் செய்யும் மனிதர்களின் மன நிலைக்குத் தகுந்த ஆற்றலை உணவு வாங்கிக் கொண்டு அதை நமது குணங்களோடு இணைத்து விடும்.

முக்கியமாக 7 இடங்களில் உணவு உண்ணவே கூடாது என்று கருட புராணம் கூறுகிறது அதைப் பற்றிய முழு தகவல் மேலே உள்ள வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது அதை அனைவரும் பார்த்து பயன்பெறுங்கள் இந்த தகவல் பற்றிய உங்களுடைய கருத்துக்களை கீழே கமெண்ட் இல் பதிவு செய்யுங்கள்.

Post a Comment

0 Comments