Marangapuri Bhagavathi Amman Temple Festival - Yoga with Mahe

மருங்காபுரி பகவதி அம்மன் கோயில் திருவிழா

திருவிழா என்றாலே பெரும் கொண்டாட்டமாகத்தான் இருக்கும் அதிலும் பாரம்பரியமாக கொண்டாடும் குலதெய்வ வழிபாடு என்றால் சொல்லவே வேண்டாம். ஆட்டம், பாட்டம் கச்சேரின்னு களைகட்டும் அப்படி ஒரு நிகழ்வுதான் இது.


மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஜமீன் பகவதி அம்மன் கோயிலில் பால்குட விழா நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஜமீனுக்கு சொந்தமான மருங்காபுரி பகவதி அம்மன் கோயில் திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி, பூச்சொரிதல் காப்புகட்டுதலுடன் தொடங்கியது. 

கடந்த 7 நாட்களாக ஜமீன் அரண்மனை மற்றும் கோயில் முக்கியஸ்தர்களின் மண்டகபடிகள் நடைபெற்று வரும் நிலையில், 8ம் நாளான நேற்று காலை பால்குட உற்சவம் நடைபெற்றது.

Post a Comment

0 Comments