Yoga in Tamil
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் மனித உடலுக்கு தேவையான பல அற்புத பலன்கள் அடங்கியுள்ளன. தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதனால் தேக ஆரோக்கியம் பெறுவதுடன் செரிமான கோளாறுகளும் சரியாகும். ஆனால் வாழைப்பழத்தை விட அதன் தோலில் அதிக நன்மைகள் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா.? வாழைபழத் தோலின் நன்மைகளைப் பற்றி இந்த படத்தொகுப்பில் காணலாம்.!
https://www.youtube.com/watch?v=-oB7OnlVO8A
வாழைப்பழத்தின் தோலை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதை குடித்து வந்தால் சரும பிரச்சனைகள் நீங்கி தேகம் பொலிவடையும். தீராத மனநோயையும் தீர்க்கும் மகத்துவம் வாழைப்பழத் தோலில் அடங்கியுள்ளது.
பற்களில் வாழைப்பழ தோலை வைத்து தினமும் காலையில் தேய்த்து வந்தால் பற்கள் வெண்மையாகுவதுடன், பற்கள் சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
குளிர்காலத்தில் நிறைய பேருக்கு சருமம் வறண்டு போகக்கூடும். இப்படி வறண்ட பகுதிகள் உள்ள இடத்தில் வாழைப்பழத்தின் தோலை வைத்து தினமும் தேய்த்து வர வறண்ட சருமம் விரைவில் மறைந்து சருமம் பொலிவுறும்.
வாழைப்பழத்தின் தோலை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர மன அழுத்தம் குறையும்
சூரிய கதிர்களால் உண்டாகும் கருமை பாதிப்புகளை நீக்க வாழைப்பழத்தின் தோலை கொண்டு முகத்தில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
வாழைப்பழத்தோல் கண்களுக்கு குளிர்ச்சியை தரும். அதனால் இந்த வாழைப்பழத் தோலை கண்களின் மீது வைத்திருப்பதால் கண்களை குளிர்ச்சியாக்கலாம்.
மருக்கள் உள்ள இடத்தில் வாழைப்பழத்தின் தோலை வைத்து நன்றாக தேய்த்தால், மருக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரவாமல் தடுக்கலாம்.
மூட்டை பூச்சிகள் போன்ற பூச்சிகள் கடித்து விட்டால் அந்த இடத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவை உண்டாகும். அதை தடுக்க வாழைப்பழத்தின் தோலை வைத்து அந்த இடத்தில் நன்றாக தேய்க்க வேண்டும்.
முகத்தில் பருக்கள் உள்ள இடத்தின் மீது மிருதுவாக வாழைப்பழத்தின் தோலை வைத்து தேய்த்தால் முகத்தில் உள்ள பருக்கள் மறையும்.
Web Title: Benefits of banana skin
(from Mithra Tamil)
More Info: healthy life | health tips | Benefits Of Banana | beauty tips | Banana
0 Comments