siddhars name, month of birth and stars of birth - Yoga with Mahe

சித்தரின் பெயர் பிறந்த மாதம் நட்சத்திரம் 

 வாழ்நாள்  சமாதியடைந்த இடம்


சித்தர்கள், மகான்கள் மற்றும் ஞானியர்கள் மனிதனாக பிறந்தாலும் மனித பிறப்பின் நோக்கம் என்ன என்பதை உணர்ந்து அதற்கான வாழ்க்கை முறையினை வகுத்து அதன் படி வாழ்ந்து உன்னதநிலையான பேரானந்த நிலையை அடைந்தார்கள். அவர்கள் அடைந்த நிலையை மனிதனாக பிறந்த அனைவரும் அடையும் பொருட்டு பிரம்ம இரகசியங்களை நமக்கும் தந்தருளி சென்றுருக்கிறார்கள். 

அன்பும், கருணையும் கொண்ட மகிமை பொருந்திய சித்தர்களில் 18 சித்தர்கள் பிரசித்தி பெற்றவர்கள் அவர்கள் பிறந்த மாதம், நட்சத்திரம் மற்றும் வாழ்ந்த காலம், பின் முக்தி பெற்ற தலம் பற்றிய தகவலை இந்த பதிவில் தெரிந்து கொல்வோம் .

 



1.பதஞ்சலி   பங்குனி   மூலம்  5 யுகம் 7நாட்கள்  இராமேசுவரம்.

2.அகத்தியர்   மார்கழி   ஆயில்யம்  4 யுகம் 48 நாட்கள்  திருவனந்தபுரம்.

3.கமலமுனி   வைகாசி   பூசம்  4000 வருடம் 48 நாட்கள திருவாரூர்.

4.திருமூலர்  புரட்டாதி   அவிட்டம்  3000 வருடம் 13 நாட்கள்  சிதம்பரம்.

5.குதம்பையார்   ஆடி   விசாகம்  1800 வருடம் 16 நாட்கள்  மாயவரம்.

6.கோரக்கர்   கார்த்திகை ஆயில்யம்  880 வருடம் 11 நாட்கள்  பேரூர்.

7.தன்வந்திரி   ஐப்பசி   புனர்பூசம்  800 வருடம் 32 நாட்கள்  வைத்தீச்வரன் கோவில்.

8.சுந்தரானந்தர்   ஆவணி   ரேவதி  800 வருடம் 28 நாட்கள்  மதுரை.

9.கொங்கணர்   சித்திரை   உத்திராடம்  800 வருடம் 16 நாட்கள்  திருப்பதி.

10.சட்டமுனி   ஆவணி  மிருகசீரிடம்  800 வருடம் 14 நாட்கள்  திருவரங்கம்.

11.வான்மீகர்   புரட்டாதி   அனுசம்  700 வருடம் 32 நாட்கள்  எட்டுக்குடி.

12.ராமதேவர்   மாசி   பூரம்  700 வருடம் 06 நாட்கள்  அழகர்மலை.

13.இடைக்காடர்   புரட்டாதி   திருவாதிரை  600 வருடம் 18 நாட்கள்  திருவண்ணாமலை.

14.மச்சமுனி   ஆடி   ரோகிணி  300 வருடம் 62 நாட்கள்  திருப்பரங்குன்றம்.

15.கருவூரார்   சித்திரை   அஸ்தம்  300 வருடம் 42 நாட்கள்  கருவூர், தஞ்சை.

16.போகர்   வைகாசி   பரணி  300 வருடம் 18 நாட்கள்  பழனி.

17.பாம்பாட்டி   கார்த்திகை   மிருகசீரிடம்  123 வருடம் 14 நாட்கள்  சங்கரன்கோவில்.

18.சிவவாக்கியர் காலம் தெரியவில்லை கும்பகோணம்.

சித்தர்களை பற்றிய தொகுப்புகள்.

Post a Comment

0 Comments