How to Eka pada asana in Tamil or benefits in power Yoga | Yoga with Mahe

yoga is essential for life

Besides good health,


 
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை குரு வாழ்க 
நாம் இன்றைய பதிவில் நின்ற நிலையில் செய்யும் ஏகபாத ஆசனத்தின் செய்முறை விளக்கத்தை பற்றி தெரிந்துகொள்ள இருக்கிறோம். 
எந்த ஒரு ஆசனங்கள் செய்வதற்கு முன் ஆசன விதி முறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம். ஆசன விதி முறைகள் பற்றிய முழு விளக்கமும் வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளது.
 

நின்ற நிலை ஏகபாத ஆசனத்தின் செய்முறை விளக்கம்;

 
முதலில் விரிப்பின் மீது நேராக நிற்கவும். இடது காலை உயர்த்தி வலது கால் தொடை மீது  பெருவிரல்கள் கீழ் நோக்கி இருக்கும் படி வைக்கவும். நிதானமாக நின்ற பிறகு மூச்சு காற்றை மெதுவாக உள்ளே இழுத்துக் கொண்டு  இரண்டு கைகளையும் தலைக்கு மேலே பக்கவாட்டில் உயர்த்தி உள்ளங்கைகள் இரண்டும் சேர்ந்த நிலையில் வைத்துக்கொள்ளவும். அதே நிலையில் 5 இயல்பான மூச்சு நேரம் இருக்க வேண்டும் மூச்சுக்காற்றில் கவனம் செலுத்தி நிதானத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
 
5 இயல்பான மூச்சு காற்றுக்கு பிறகு மூச்சுக்காற்றை வெளியேற்றிக் கொண்டே கைகளை இறக்கி பின் கால்களையும் கைகளின் உதவியோடு இறக்கி இயல்பாக நிற்கும் நிலைக்குத் வரவும். உடலில் பிடிப்பு, உடலில் நடுக்கம், பதட்டம் போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்தால் இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து நேராக நின்று 30 வினாடிகள் ஓய்வு எடுத்து கொள்ள வேண்டும். 
 
பிறகு மீண்டும் வலது காலை கைகளின் உதவியோடு உயர்த்தி இடது காலின் தொடை மீது வைக்க வேண்டும் பெருவிரல்கள் கீழ்நோக்கி இருப்பது போன்று பார்த்துக் கொள்ளவும்.  பிறகு நிதானத்துடன் மூச்சுக் காற்றை உள்ளே இழுத்துக் கொண்டே கைகளிரண்டையும் தலைக்கு மேல் பக்கவாட்டில் உயர்த்தி உள்ளங்கைகள் இரண்டும் ஒட்டியவாறு வைத்து ஐந்து இயல்பான மூச்சுக்காற்று நேரம் நிற்க வேண்டும். 
 
5 இயல்பான மூச்சு காற்றுக்கு பிறகு மூச்சுக்காற்றை வெளியேற்றிக் கொண்டே கைகளை இறக்கி பின் கால்களையும் கைகளின் உதவியோடு இறக்கி இயல்பாக நிற்கும் நிலைக்குத் வரவும்.
 

இதே போன்று இந்தப் பயிற்சியை 3 முறை செய்யலாம். 
நின்றநிலை ஏகபாத ஆசனத்தின் நன்மைகள் 

 
இந்த ஆசனம் செய்வதால் நமக்கு  மன ஒருமைப்பாடு தினம் சிந்தனையும் உருவாகும். மற்றும் வாத நோய் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
 
இந்த ஆசனத்தின் முழு செய்முறை விளக்கம் மேலே உள்ள காணொளிப் பதிவில் பதிவிட்டிருக்கிறேன். அதை பார்த்து உங்களுடைய கருத்துக்களை கீழே கமெண்ட் இல் பதிவு செய்யவும் இதேபோல் அடுத்து ஒரு நல்ல தகவலில் உங்களை சந்திக்கிறேன். 
 
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை குரு வாழ்க

Post a Comment

0 Comments